2024 பிரெஞ்சு கலாசார பருவ காலத்தின் ஓர் அங்கமாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரெஞ்சு தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான Alliances Françaises வலையமைப்புடன் இணைந்து பரந்தளவில் பாராட்டைப் பெற்ற பிரெஞ்சு திரைப்படமான The Count of Monte-Cristo (Le Comte de Monte-Cristo) இலங்கையின் One Galle Face PVR திரையரங்கில் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி 3 மணிக்கு திரையிடப்படுகின்றது.
ஆங்கில உப தலைப்புகளுடன் அனைவருக்கும் நுழைவு இலவசம். இது 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உகந்த திரைப்படம் ஆகும். திரைப்படத்தின் காலம்: 2:58 மணிநேரம் (178 நிமிடங்கள்)
Alexandre Dumas ன் காவிய நாவலான The Count of Monte-Cristo பரவசமூட்டும் பின்னணியில் மற்றும் மனதைக் கவரும் வேகத்துடன் உண்மையில் ரசனையின் உச்சத்தில் வெளிவருகிறது. கேன்ஸ் திரைப்பட விழா போட்டிக்கு அப்பாலான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2024 மே மாதம் 22ஆம் திகதியன்று திரையிடப்பட்டது.
இலங்கையின் முதல் தர சினிமாவில் திரையிடப்படும் இத்திரைப்படத்தை சினிமா ஆர்வலர்கள் காணத்தவறாதீர்கள்.
இத்திரைப்படத்தின் இயக்குனர்களான Matthieu Delaporte மற்றும் Alexandre de La Patellière ஒன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளரான Alexandre Dumas வினால் 1844ல் எழுதப்பட்ட வீர காவிய நாவலான Le Comte de Monte-Cristo பெயரிலே திரைப்படத்தையும் தயாரித்துள்ளனர்.
கதையின் சுருக்கம்: இளம் Edmond Dantès தான் செய்யாத குற்ற மொன்றுக்காக தனது திருமண நாளன்று கைது செய்யப்படுகின்றான். Château d’If தீவுச்சிறையில் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் சிறையிலிருந்து லாவகமாய் தப்பிச்செல்கிறான். பெருஞ்செல்வந்தனான Count of Monte-Cristo தன்னைக் காட்டிக்கொடுத்தவர்களை பழிவாங்குவதற்காக புனைப்பெயருடன் பிரான்ஸ் நோக்கி திரும்புகிறான்.
புகழ்ப்பெற்ற Pathé பிரெஞ்சு சினிமா நிறுவனத்தின் தயாரிப்பான இத்திரைப்படம் 2024 வெளியிடப்பட்டது. பிரெஞ்சு கோடைக்காலத்தில் மிக ஆவலுடன் வெளிவர காத்திருந்த திரைப்படம். 7 மில்லியன் பிரெஞ்சு பார்வையாளர்களை கவர்ந்ததுடன் மிகச்சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.
புத்தகம் மற்றும் சினிமா இரண்டும் பார்வையாளர்களை ஒரே மாதிரியாக கவர்ந்திழுக்கும் கதையை காட்சிப்படுத்துகிறது.
மாயாஜால பிரெஞ்சு சினிமாவை கண்டு ரசிக்க இலங்கை பார்வையாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு: https://lk.ambafrance.org/-Anglais-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM