யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர். 

பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.