ஆச்சரியம் அளிக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்கள்..!

05 Nov, 2024 | 07:33 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தங்களுக்குத் தெரிந்த வழிகளில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கான பலன்கள் என்பது வேறுபடும்.  

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆன்மீக ரீதியில் இந்த பிறவியில் நீங்கள் வாங்கி வந்த வரம் அல்லது அருளின் அளவு அவ்வளவுதான் என எடுத்துக் கொள்ள வேண்டும்.  

இந்த தருணத்தில் எம்மில் பலரும் கடின உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கவில்லையே...! என்ற ஏக்கம் இருக்கும். வேறு சிலருக்கு நினைத்த காரியம் ஒருபோதும் நடக்கவில்லையே..! என்ற ஆதங்கம் இருக்கும்.  

வேறு சிலருக்கு குறைந்தபட்ச ஆசைகள் கூட நிறைவேறவில்லையே..! என்ற கவலை கூட இருக்கும். வேறு சிலருக்கு என்னதான் மற்றவர்களுக்கு நன்மையை செய்தாலும்.. ஆயுசுக்கும் இதே அளவில் தான் என்னுடைய வாழ்க்கை பயணிக்குமா..!  என்ற சலிப்பும் ஏற்படும்.  

 இவர்கள் அனைவருக்கும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பிரதோஷ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். 

பிரதோஷ வழிபாட்டிற்கு உரிய பொருட்கள் வில்வ இலை- மிளகு (108). 

பிரதோஷ தினத்தன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்னரே நீங்கள் நீராடும் நீரில் சில வில்வ இலைகளை அதில் இட வேண்டும். 24 நிமிடம் கழித்து அந்த நீர் -வில்வ தீர்த்தமாக மாறிவிடும்.  

இந்த வில்வ தீர்த்தத்தில் நீராடுங்கள். பிறகு வீட்டில் உள்ள பூஜை அறையில் 108 மிளகுகளை எடுத்துக்கொண்டு அதனை ஒவ்வொன்றாக எடுத்து 'ஓம்' எனும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.  

பிறகு அந்த 108 மிளகாயையும் ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் தொடங்கும் பிரதோஷ வழிபாட்டிற்காக அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, அந்தத் தருணத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை தரிசித்து, 'ஓம்' எனும் மந்திரத்தை உச்சரித்து, உங்களுடன் வைத்திருக்கும் மிளகின் மீது கையை வைத்துக் கொண்டு உங்களது பிரார்த்தனையை சிவபிரானிடமும் , சிவபிரானுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கும் நந்தியம்பெரும்பானிடமும் சமர்ப்பணம் செய்யுங்கள்.  

நீங்கள் நந்தியம்பெருமானிடம் வைத்திருக்கும் ஒற்றை கோரிக்கை- தொடர்ச்சியாக பிரதோஷ வழிபாட்டை விரதத்துடன் மேற்கொள்ளும் போது அவை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.  

மேலும் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் வீட்டுக்கு எடுத்து வந்திருக்கும் மிளகினை நாளாந்தம் ஒன்று ஒன்றாக உணவுடன் சேர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.  

சிவனின் பரிபூரண அருளை பெற்ற அந்த மிளகு.. உங்களுக்குள் சென்றவுடன் நேர் நிலையான அதிர்வலையை ஏற்படுத்தி உங்களின் எண்ணத்தை ஈடேறி மகிழ்ச்சியை பரவச் செய்வதை அனுபவத்தில் உணரலாம்.   

நினைத்தது நடக்கவில்லை என்றாலும் உங்களுடைய தொடர்ச்சியான பிரதோஷ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாருங்கள். ஓராண்டிற்குள் உங்களுடைய கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம். 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலன்களை அள்ளித் தரும் பிரத்யேக கார்த்திகை...

2024-12-10 16:09:47
news-image

தன வரவு அதிகரிப்பதற்கான எளிய வழிமுறை..!

2024-12-09 17:08:09
news-image

கேட்டதை எல்லாம் கொடுக்கும் கேளக்கிய சித்தர்..!

2024-12-07 17:18:39
news-image

2024 டிசம்பர் மாத ராசி பலன்கள்

2024-12-05 12:00:20
news-image

வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரத்தியேக குளியல்...

2024-12-04 17:33:20
news-image

நவக்கிரகங்கள் நீசமடைதலும் பரிகாரங்களும்

2024-12-03 18:40:17
news-image

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவதானிய பரிகாரம்

2024-12-02 17:15:35
news-image

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வலிமையான நான்கு...

2024-11-30 16:00:03
news-image

பில்லி, சூனிய பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள எளிய...

2024-11-29 18:30:06
news-image

கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கான சூட்சம வழிமுறை...!!?

2024-11-28 18:26:18
news-image

வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரச மர...

2024-11-27 16:00:24
news-image

எம்முடைய பிள்ளைகள் கல்வியில் பெறுபேறு பெறுவதற்கான...

2024-11-26 18:19:37