'நாக்க முக்க ' புகழ் நடிகர் நகுல் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
'D3 ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தில் நகுல், சரண், டேனி தயாள், அலெக்ஸ், கோதை சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இதன் போது இயக்குநர் பாலாஜி பேசுகையில், '' இந்த திரைப்படத்தை பாரம்பரியமாக சொல்லப்பட்டு வரும் நாட்டார் கதைகளை மையப்படுத்தி இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜேனரில் உருவாக்கி இருக்கிறோம். 'காந்தாரா' படத்திற்கு பிறகு மீண்டும் தமிழகத்தின் தென் பகுதிகளில் இன்றும் மக்களின் நம்பிக்கைக்கு உரிய நாட்டார் கதைகளை தழுவி இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் நகுல் முதன்முறையாக புலனாய்வு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM