சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படத்தின் வெற்றி கொண்டாட்டம்

05 Nov, 2024 | 05:12 PM
image

''அமரன் படத்தின் வெற்றியின் மூலம் எமக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இன்னும் அதிக பட்ஜட்டிலான திரைப்படத்தில் நடித்து, மக்களை மகிழ்விக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது'' என 'அமரன்' படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

'உலகநாயகன்' கமல்ஹாசனின் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரான 'அமரன்' திரைப்படம்- தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியானது. 

எதிர்பார்த்ததை போலவே இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. அத்துடன் வெளியான மூன்று நாட்களில் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து புதிய சாதனையையும் படைத்தது.

இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

இந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், படத்தொகுப்பாளர் கலைவாணன், ஒளிப்பதிவாளர் சி ஹெச் சாய், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி சாய் பல்லவி ஆகியோர் பங்கு பற்றினர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், '' ஒரு கதையை நேர்மையாகவும், முழுமையான அர்ப்பணிப்புடனும் ரசிகர்களுக்கு படைப்பாக வழங்கினால்... அதனை மிகப்பெரிய வெற்றி அடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்தப் படத்தின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. மேலும் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலையும் இந்த வெற்றி எமக்கு அளித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் எது உண்மை? எது சித்தரிப்பு? எது உங்கள் கற்பனை? என வினா எழுப்புகிறார்கள். சுயசரிதை திரைப்படங்கள் என்பது ஒரு வகைமையிலான படைப்புகள். இதற்கு முன்னர் 'டைட்டானிக்' , 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என இந்த வகைமையிலான திரைப்படங்கள் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. 

இதற்கென்று சில நியாய தர்மங்கள் உள்ளது. அதனை முறையாகவும், முழுமையாகவும் கடைப்பிடித்து எழுதப்பட்ட ஒரு திரைக்கதை தான் அமரன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில், '' இந்த கதையை கேட்டவுடன் எமக்கு சிறைத்துறை அதிகாரியாக இருந்து நேர்மையாக பணியாற்றி உயிரிழந்த எம்முடைய தந்தையார் நினைவுக்கு வந்தார். 

அத்துடன் படத்தின் உச்சகட்ட காட்சியில் அற்புதமாக நடிக்கும் நடிகை தேவைப்பட்டார். அதனை சாய் பல்லவி முழுமையாக உணர்ந்து அர்ப்பணிப்புடன் நடித்து படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்ததற்காக முதலில் 'உலகநாயகன்' கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை சாத்தியமாக்கி படமாளிகையில் வெளியிடுவதற்கு உதவிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் வெற்றி எமக்கு புதிய நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதைவிட பிரம்மாண்டமான பொருட்செலவில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்திருக்கிறது'' என்றார்.

இதனிடையே ‘அமரன்’ படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா,... படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34