பூசணிக்காயில் படகு சவாரி செய்து கின்னஸ் சாதனை

Published By: Digital Desk 3

06 Nov, 2024 | 11:11 AM
image

பூசணிக்காய் என்ற உடன்  கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது.இந்துக்கள் இறை வழிபாடுகளில் பயன்படுகிறது. ஹாலோவீன் தினத்திற்கு பயன்படுகிறது என்று தான் நாம் கேட்டு அறிந்து இருப்போம்.

ஆனால் எங்காவது பூசணிக்காயில்  படகு சவாரி செய்த சம்பவம் குறித்து அறிந்து இருக்கிறோமா இல்லை.

ஆனால் தற்போது  அந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

பூசணிக்காய் மீது  அலாதி பிரியம்  கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் 555 கிலோ பூசணிக்காயை வளர்த்து அதை படகாக பயன்படுத்தி  73.5 கிலோ மீற்றர் பயணித்துகின்னஸ் சாதனை  படைத்துள்ளார்.

கேரி கடந்த 2011  ஆம் ஆண்டு முதல் பெரிய பூசணிக்காய்களை வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் பூசணிக்காய் படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் நடத்தப்படும் பெரிய பூசணிக்காய் படகு போட்டி நிகழ்வில் (Giant Pumpkin Regatta-an event) கலந்து கொண்டபோது  உதயமாகியுள்ளது.

கேரி இந்நிகழ்வில் கடந்த நான்கு ஆண்டுகளாக கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு இவ் ஆண்டு  சரியான அளவில் பூசணிக்காயை வளர்த்து சாதனை புரிய தீர்மானித்தார்.

கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் பூசணிக்காய் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுபத்தப்பட்டு அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. அதன் சுற்றளவு 429.26 சென்றி மீற்றரும் (169 அங்குலம்) நிறை 555.2 கிலோ கிராமும் இருந்துள்ளது.

இது ஒரு பெரிய பியானோ அல்லது ஒரு வயது ஒட்டகத்தின் நிறை என தெரிவிக்கப்படுகிறது. 

பூசணிக்காயை படகாக செதுக்கிய பின்னர் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அதற்கு "பங்கி லோப்ஸ்டர்" என்று பெயரிட்டார்.

பூசணிக்காயில் கமராவை பொருத்தி அவர் துடுப்பில் பயணம் செய்வதை காணொளியாக வெளியிட்டார்.

கடந்த அக்டோபர் 12 முதல் 13 ஆம் திகதி வரை கொலம்பியா ஆற்றின் குறுக்கே 26 மணித்திலயாலங்களில் 73.50 கிலோ மீற்றர் தூரத்தை பூசணிக்காய் படகில் கடந்துள்ளார்.

அவருக்கு இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 56 கிலோ மீற்றர் வேகத்தில்  காற்று வீசியதோடு,  அலைகளிலும் சிக்குண்டுள்ளார்.

"பங்கி லோஃப்ஸ்டர்" நன்றாக மிதக்க வேண்டும் என்பதற்காக, கேரி இரவிலும் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

பாதுகாப்பாக நங்கூரமிடக்கூடிய இடத்தைத் தேடி ஹேடன் தீவை நோக்கி செல்வதற்காக இரவு முழுவதும் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இறுதியாக வொஷிங்டனின் வான்கூவரில் தனது  பூசணிக்காய் படகை நங்கூரம் இட்டார். அங்கு அவரை பத்திரிக்கையாளர் வரவேற்றுள்ளார்.

இதன்போது, நான் சாதனையை முறியடிக்கவில்லை என்றால், நான்  நான் ஒரு நம்பமுடியாத சாகசத்தை செய்தேன் என தெரிவித்திருந்தார்.

கேரி இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட 63.04 கிலோமீட்டர் பூசணிக்காய் படகு பயண சாதனையை 73.50 கிலோமீட்டர் பயணத்தில் முறியடித்துள்ளார்.

ஆர்வம், விடாமுயற்சி மற்றும் பூசணியின் ஒரு சிறிய மாய சக்தி ஆகியன தனது வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்