(க.கமலநாதன்)

இந்திய அரசாங்கத்திற்கு மலையகத் தோட்ட தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு முழு உதவி வழங்கவேண்டிய கடமையுள்ளது என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடத்தில் வலியுறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

அதேநேரம் இந்திய தலைவர் ஒருவரின் மலையகத்திற்கான விஜயம் முதல் முறையாக இடம்பெறும்போது அவரிடம் வலியுறுத்தும் காரணங்களை விடுத்து அவருக்கு வரவேற்பளிப்பதையே முதன்மையாக கருதுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் போது அவரின் மலையக கட்சியகள் அவரிடத்தில் வலியுறுத்த போவது யாதென வினவியபோதே மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.