ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச்சென்ற ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ்வண்டியே ஹட்டன் மல்லியயப்பு பகுதியில்  பிற்பகல் 2 மணியளவில் பாதையை விட்டு விலகி மண்மேட்டில் மோதி  விபத்துக்குள்ளானது. 

பஸ் தடை திடீரென இயங்காமையினாலே விபத்து சம்பவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன் பஸ்ஸில் பயணிதவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையென தெரிவித்தனர்.