பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக அவதூறுசுமத்தியோருக்கு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஅல்விசின் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கையில் இருவருக்கு எதிராகவும் முன்வைக்கப்ட்ட நியாயமற்ற பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு காரணமானவர்களிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல்உள்நோக்கம் கொண்ட உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த அறிக்கையில் இருவருக்கும் எதிராக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏன் இந்த குழுவை அவசரஅவசரமாக நியமித்தார் என்ற அதிர்ச்சி தரும் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்தும் அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் நோக்கிலும் இந்த ஆணைக்குழுவை எற்படுத்தவில்லை - மாறாக ஜனாதிபதி தேர்தலின் போது தன்னுடன் இணைந்து பணிபுரியுமாறு முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பிரதானி விடுத்த வேண்டுகோளை ரவிசெனிவிரட்ண மறுத்தமைக்காக அவரை பழிவாங்குவதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ரவிசெனிவிரட்ண நிரகரித்துவிட்டு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பினை உருவாக்கினார்.
முன்னைய அரசாங்கத்தினை ஆதரிக்குமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதா என செனிவிரட்ணவிடம் கேள்வி எழுப்பியவேளை அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
எனினும் தானும் ஷானிஅபயசேகரவும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்ததும் முன்னைய ஆட்சியாளர்கள் அதிருப்தியடைந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவதற்காகவே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயஹி அல்விஸ் தலைமையிலான மூவர் கொண்ட குழுவை நியமித்தனர் என தெரிவித்துள்ள செனிவிரட்ணவும் அபயசேகரவும் குற்றவாளிகளை கண்டறியும் நோக்கில் இந்த ஆணைக்குழுவை நியமிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
2024 ஜூன் 9ம் திகதி மகரஹமவில் தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் நாங்கள் மேடைஏறினோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை எப்படி தொடர்ந்து வந்த தலைவர்கள் ஆட்சியாளர்கள் சீர்குலைத்தனர் என்பதை வெளிப்படுத்தினோம் என செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
daily mirror
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM