(நெவில் அன்தனி)
இலங்கை உட்பட 11 அணிகளுக்கு தலா 8 தொடர்களில் பங்குபற்றும் வகையில் மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலுவான எதிர்கால சுற்றுப் பயணத் திட்டத்தைச் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
நான்காவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் அத்தியாயத்திற்கான இந்தத் திட்டம் 2025 மே மாதம் ஆரம்பித்து 2029 ஏப்ரல் மாதம் நிறைவடையவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சொந்த மண்ணில் 4 நாடுகளுடனும் அந்நிய மண்ணில் 4 நாடுகளுடனும் இருதரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இலங்கை விளையாடும். ஐசிசியின் போட்டி அட்டவணைப்படி இந்தியாவுடனும் தென் ஆபிரிக்காவுடனும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடர்களில் இலங்கை விளையாடாது.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான இரு தரப்பு தொடர்களில் இலங்கை வரவேற்பு நாடாக இருக்கும்.
நியூஸிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடர்களை அந்தந்த நாடுகளில் இலங்கை எதிர்கொள்ளும்.
அதேவேளை, 2028இலும் 2029இலும் ஐசிசி போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் மகளிர் மும்முனை சர்வதேச தொடர்களில் இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் விளையாடுவதற்கான வாய்ப்பையும் ஐசிசி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
ஐசிசியின் ஆதரவுடன் அதன் உறுப்பு நாடுகளில் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.
இந்த காலப்பகுதியில் மூவகை சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் மொத்தம் 400 போட்டிகள் நடைபெறவுள்ளன.
நடப்பு சுழற்சி காலத்தில் (2022 - 2025) மூவகை கிரிக்கெட்டில் விளையாடப்படும் போட்டிகளை விட அடுத்த அத்தியாயத்தில் போட்டிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மகளிர் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் பிரகாரம் 2027இல் ஆறு நாடுகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் நடைபெறும். அதன் பின்னர் வருடா வருடம் இந்தப் போட்டி தொடரும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 (இந்தியா), மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026 (ஐக்கிய இராச்சியம்), ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2028 (இடம் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது) ஆகிய ஐசிசியினால் நடத்தப்படும் பிரதான போட்டிகள் நடைபெறும்.
நான்காவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் 3ஆவது அத்தியாயத்தில் பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய அணிகள் 8ஆவது, 9ஆவது நாடுகளாக இணைத்துக்கொள்ளப்பட்டன. அடுத்த அத்தியாயத்தில் 11ஆவது நாடாக ஸிம்பாப்வே இணைக்கப்படும்.
மகளிர் சம்பியன்ஷிப்பில் 11 அணிகளுக்கும் சம அளவிலான தொடர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 4 தொடர்களிலும் அந்நிய மண்ணில் 4 தொடர்களிலுமாக 8 தொடர்களில் விளையாடும். மொத்தமாக 44 தொடர்களில் 132 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடர்கள், ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் 2029க்கான் தகுதிகாண் சுற்றாகவும் அமையும். அதேவேளை, இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின்போது மற்றைய வகை தொடர்களை ஏற்பாடு செய்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இதேவேளை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடர்களுடன் அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இணங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM