மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும் ஒட்டுகுழுக்கள்; ஜனநாய முறையில் தேர்தலை நடாத்த தேர்தல் திணைக்களம் செயற்படவேண்டும் - த.சுரேஸ்

Published By: Vishnu

04 Nov, 2024 | 08:17 PM
image

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்ற ஓட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான கூட்சமங்களில் ஈடுபடுகின்றனர் எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலை கவனமாக கையாளவேண்டும் அதேவேளை தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக் குழு அமைப்புக்கள் பெவரல் அமைப்பு செயற்பட வேண்டும் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்றை நிலையத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 2009க்கு பின்னர் இருந்த காலங்களைவிட மிக இறுக்கமான தேர்தலைக் கையாளுகின்றனர் கடந்த காலங்களில் ஓட்டுக்குழுக்கள் தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தலைச் செய்து பாராளுமன்றம் முதலமைச்சர் பதவிகளையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொண்ட இந்த ஊழல்வாதிகள் இந்த தேர்தலையும் ஒரு ஜனநாயக ரீதியில் நடாத்த விடாமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களை மீண்டும்  அவர்களை மிரட்டி வாக்குகளைப் பெறுகின்ற ஒரு பயங்கரமான நிலைப்பாடு நடந்தேறுகின்றது.

குறிப்பாக ஜெயந்திபுரத்தில் கருணா பிள்ளையான் கட்சி ஆதரவாளர்களுக்குள்ளே இடம்பெற்ற மோதலில் 3 பேர் வைத்தியசாலையில் 6 பேர் கைது இதேபோன்று என்னுடைய என்னுடைய சொந்தஊரான படுவான்கரை பிரதேசத்திலுள்ள முனைக்காடு பிரதேசத்தில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கேயும் பிள்ளையானின் அடியாள் ஒருவர் வந்து பிள்ளையான் வீதி  அமைத்துள்ளார் அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இவ்வாறு கடந்தகாலத்தில் ஆயுத முனையில் அச்சுறுத்தல் செய்த மாதிரி இந்த தேர்தலில் குழுக்களாக சேர்ந்து அச்சுறுத்தலை மேற்கொண்டு ஒரு ஜனநாயக வழியில் தேர்தலை நடாத்த விடாமல் அச்சுறுத்தல் வழியில் தங்களுக்கான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

துமிழ் மக்களை இதுவரை ஏமாற்றி வந்துள்ள தரப்புக்களை ஒதுக்கப் போகின்றனர் என்ற நிலைப்பாட்டை அறிந்த ஒட்டுக்குழுக்கள் கிராமங்களிலே இரவுவேளைகளில்  உட்புகுந்து மக்களையும் தாய்மார்களையும் மிரட்டி வாக்குகளைப் பெறுவதற்கான கூட்சமங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் இந்த ஊழல் வாதிகளையும் ஒட்டுக்குழுக்ககளையும்  நிராகரிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏற்கனவே மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நிலையிலே இந்த தேர்தலும் அவ்வாறான நிலை காணப்படுகின்றது  எனவே தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதி,  தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பெவரல் அமைப்பு விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும்.   

எனவே தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே இடம்பெற்ற தேர்தல் போன்று இந்த தேர்தலைக் கையாளக்கூடாது ஏன் என்றால் இந்த தீவிலே தமிழ் மக்கள் உரிமையோடு எதிர்காலத்தில் வாழக்கூடிய மாதிரி வடகிழக்கிலுள்ள தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய இராஜ்ஜிய இடைக்கால அறிக்கை கிடைப்பிலே கிடக்கின்றது இந்த நாட்டின் ஜனாதிபதி தெளிவாகத் தெரிவித்திருந்தார் இந்த நாட்டில் வெற்றியீட்டும் தமிழர் தரப்புடன் இணைந்து தேர்தலுக்குப் பின்னராக நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்  எனவே அவர் ஒற்றையாட்சிகுள்ளே தான் இந்த தீர்வை காண்பதற்காக மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களிலே இருந்த தமிழ் தலைமைகள் அத்தனை பேரும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றும் முகமாக அவர்களது  நடவடிக்கைகள் இருந்ததுடன் இந்திய பிரதமருக்கு 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த ஏழு கட்கிகளும் தான் இன்று பிரிந்து நின்று  சங்கிலும் வீட்டிலும் கேட்கின்றனர் இந்த வடக்கு கிழக்கிலே ஒரு நேர்மையான உறுதியான தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைக் கொண்டு செல்லக் கூடிய எமது கட்சி தலைவர் கஜேந்திரகுமார் செயற்படுகின்றார் கடந்த 15 வருடமாக மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றார் அப்படிப்பட்ட அவருக்கு மக்கள்  திரண்டு கூடிய ஆசனங்களை வழங்கும் பட்சத்தில் தான் இந்த நடைபெறவுள்ள பெரும் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.

வீடு சங்கில் போட்டியிடுகின்றவர்கள் இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை விரும்பி ஒத்துழைப்பார்கள் இவர்கள் இங்கே தேர்தலில் பிரிந்து நின்று கேட்டாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வருகின்றபோது ஜனாதிபதியுடன் இணைந்து இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்குச் செல்வார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். எனவே கஜேந்திரகுமார் அணிக்குக் குறைந்த பட்சம் 10 ஆசனங்களை மக்கள் வழங்குகின்ற போது ஜனாதிபதியின் இந்த சதியைக் கண்டிப்பாக முறியடிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41