குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவருக்கும் நீதவான் பிணையில் விடுவிப்பு

Published By: Vishnu

04 Nov, 2024 | 08:04 PM
image

அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி  எழுதிய சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் திங்கட்கிழமை (4) சரீரப் பிணையில் விடுவித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் சம்மத்துடன் சீவிய நல உரித்தின் ஆதனம் ஒன்றை கிரயமாக எழுதி விற்க சட்டத்தரணி ஒருவர் உறுதி எழுதி வழங்கியுள்ளார் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரிடம் முறைப்பாட்டையடுத்து ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டார்

இந்த நிலையில்  இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த மாவட்ட குற்ற விசாரணைப் பொலிசார் இந்த உறுதியை எழுதிய பெண் சட்டத்தரணி ஒருவரையும் இதற்கு சாட்சி கையெழுத்திட்ட ஆண் ஒருவர் உட்பட இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் திங்கட்கிழமை (4) கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை திங்கட்கிழமை (4) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை பிணையில் விடுவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09