மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 32 ரூபா பெறுமதியான மாத்திரைகளை 400 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த பாமசி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு தொகை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.