பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்பரீ கீழ்பிரிவு தோட்டத்தில் ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக்கொலை செய்த தந்தையை தாம் கைதுசெய்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவனுக்கும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவர் தனது ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தை இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவரால் தாக்கப்பட்ட மனைவி காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.