மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4, 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 11வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வினை பினாங்கு மாநில முதல்வர் தொடக்கி வைக்கவுள்ளார்.
இம்மாநாட்டில் தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகம் மற்றும் மலேசிய சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் அனுசரணையோடு கண்காட்சி நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தை உலக அரங்கில் இணை மருத்துவமாக கொண்டு செல்ல ஏதுவாக ஆயுஷ் மெடிக்கல் டூரிசம் என அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
அதில் தமிழ் பாரம்பரியமான சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் மற்றும் ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, யோகா போன்ற மக்களுக்கு பயனுள்ள மருத்துவத்தை போற்றும் விதமாக அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை மருத்துவத்தின் அரங்கங்கள் அமைய உள்ளன. இதன் மூலம் மக்கள் எளிய முறையில் பக்க விளைவுகள் இல்லாத குறைந்த செலவில் மருத்துவத்தையும், அதன் பயனையும் அரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM