மேஷம்
தனக்கான பாதையை தாங்களே செதுக்கிக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவும் சுகஸ்தானத்தில் ராசிநாதனும் அமர்வதும் தொழிலில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சில காரியங்களில் தடைகள் நீங்கி வளம் பெறும் வாய்ப்பை கொடுப்பார்கள். வெளிநாடு சென்று வர நினைப்பவர்களுக்கு அதற்கு தகுந்த வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் போதே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடைகள் உண்டாகும். சொந்த உறவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகலாம், இருந்தாலும் உங்களின் தனிதிறமை மூலம் எதையும் வெற்றி காண்பீர்கள். வரவுக்குள் செலவு செய்ய நினைப்பீர்கள், இருந்தாலும் அதிகபடியான செலவுகளைத் தவிர்க்க முடியாமல் போகும்.
சூரிய சந்திரன் இணைவு பெறுவதால் கடன் பட்ட சில விடயங்களில் கடனை அடைக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தகுந்த தருணத்தில் உங்களுக்கு உதவ நண்பர்கள் முன்வருவார்கள். அரசியலில் சற்று முன்னேற்றம் உண்டாகும். பொது வாழ்வில் கடந்த கால சோதனைகள் மறைந்து, நன்மதிப்பை பெறுவீர்கள்.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து எதை செய்தாலும் நன்மை பெறுவீர்கள். சகோதரர்களின் நிலைபாடுகள் சற்று உதவிகரமாக அமையும். செய்யும் தொழிலில் படிபடியாக முன்னேற்றம் உண்டாகும். கவலையை மறந்து சுற்றுலா சென்று வர சிலருக்கு வாய்ப்புகள் அமையும். பணப் புழக்கம் இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
02-11-2024 சனி இரவு 11.53 முதல் 05-11-2024 செவ்வாய் காலை 09.06 மணி வரையும்.
30-11-2024 சனி காலை 04.39 முதல் 02-12-2024 திங்கள் மாலை 04.38 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
ரிஷபம்
சூழலுக்கேற்ப உங்களின் செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வை பெறுவதும், பூர்வ புண்ணியாதிபதி பார்வை பெறுவதால் எதையும் புத்திசாலித்தனமாக செய்யும் வல்லமையை பெற்று நலம் பெறுவீர்கள். கருத்துகளை உள் வாங்கி உடனே பிரதிபலிக்கும் பேச்சாற்றலை பெறுவீர்கள். செய்யும் தொழிலில் அக்கறையுடன் செயல்பட்டு மேன்மையடைவீர்கள்.
அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். காரியத்தில் கவனம் செலுத்தி எதிர்கால திட்டங்களை செயல்படுத்த தேவையான உத்திகளை கையாளுவீர்கள். சொல்லியபடி நடக்க வேண்டுமென்று அதில் கவனம் செலுத்தி செயல்படுவீர்கள்.
முக்கிய தகவல்கள் மூலம் உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேறும். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் நலனை சரி செய்து கொள்வீர்கள். காலத்தையும் நேரத்தை வீணடிப்பதை விரும்பமாட்டீர்கள்.
வரும் முன் எதையும் ஊகித்து சரி செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். விளையாட்டுத்துறையில் உங்களின் பங்களிப்பு சிறப்பானதாக அமையும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். பெண்களின் பொருளாதார வளம் உயர்வடையும். கொடுத்த இடத்தில் உங்களின் தொகை சிறிது சிறிதாக கிடைக்க பெறுவீர்கள். விவசாய பொருட்கள் விலை ஏற்றம் பெறும். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தங்க நகை விற்பனையாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 05-11-2024 செவ்வாய் காலை 09.07 முதல் 07-11-2024 வியாழன் மாலை 03.49 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை 6 மணி முதல் 7 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமேற்றி சர்க்கரை ,அரிசி மாவு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
மிதுனம்
எதையாவது சாதிக்க வேண்டுமென்று எண்ணும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராகுவும், தனஸ்தானத்தில் லாபாதிபதியும் அமர்வதால் வங்கி மூலம் கடன் பெற்று தொழிலை விருத்தி செய்து கொள்ள விரும்பி, அதற்கான முயற்சிகளை செய்து வருவீர்கள். அதில் பலனும் கிடைக்கும். சுகஸ்தானத்தில் கேது அமர்வதால்.. உங்களின் உடல் நலனில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டிவரும்.
பூர்வ புண்ணியஸ்தானத்தில் சூரியன் அமர்வதால் தந்தையின் உடல் நலனை கவனிக்க வேண்டிவரும். பொது விடயங்களில் உங்களின் நல்ல ஆலோசனை பயன் தரும். எதிரிகள் கூட உங்களிடம் சற்று கவனமாகத்தான் பேசுவார்கள் முக்கிய பிரமுகரின் சந்திப்பால்.. உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும்.
உங்களை ஒதுக்கியவர்கள் இனி இணக்கமாக நடந்து கொள்வார்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்ல தகவல்களை பரிமாறிக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
எதிர்பாராத செலவுகளை கூட்டுபடுத்த முடியாது. எதிர்காலத்தில் திட்டமிடல் மூலம் செலவுகளை குறைக்கலாம். தொழிலில் போட்டியாளர்களின் நிலைபாடுகள் சற்று குறையும் போது உங்களின் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
07-11-2024 வியாழன் மாலை 03.50 முதல் 09-11-2024 சனி இரவு 08.22 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் விளக்கும். தட்சணாமூர்த்திக்கு முல்லை பூ வைத்து நெய் தீபமும் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் வெற்றியை பெறும்.
கடகம்
மனவலிமையும் திடமான நம்பிக்கையும் கொண்ட கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்தும் உங்களின் ராசியில் யோகாதிபதி செவ்வாய் அமர்வதும் மிக தெளிவான முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் பெற்று பாதகங்கள் இல்லாமல் செயல்படுவீர்கள். சரியான நோக்கங்கள் கொண்டு செயல்படுவதுடன் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களும் நடக்கும்.
அரசியலில் சில தடங்கல் வந்தாலும் உங்களின் செல்வாக்கு எந்த வித கஷ்டமும் இல்லாமல் உயர்வது மன மகிழ்ச்சியை பெற்று தரும். ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் தனாதிபதி சூரியனின் பார்வையும் படுவதால் தொழிலில் முன்னேற்றங்கள் காண்பீர்கள்.
முக்கிய முடிவுகள் எடுத்து தொழிலை லாபகரமாக மாற்றிக்கொள்வீர்கள். உங்களின் வளர்ச்சியை பிடிக்காத சிலர், அதனை தடை செய்ய நினைத்தாலும்... அது நடக்காமல் போகும். பூர்வ புண்ணியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது பெண்களால் ஆதாயம் அமையும் சூழ்நிலைகள் உருவாகும். சிலருக்கு மாமியார் வகை சொத்துகள் சாதகமாக அமையும்.
சுயமுயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், புதிய வாய்ப்புகளும் அமையும். எதையும் எதிர்கொண்டு செயல்படும் திறனும் அமையும். வெறுப்புடன் உங்களை பார்த்தவர்கள்... மகிழ்ச்சியுடன் இணைந்து செயற்படுவார்கள். தனது உத்தியோகத்தில் கடமையை சரியாக செய்து பாராட்டு பெறுவீர்கள். மறந்த விடயங்கள் நினைவுக்கு வந்து செயல்படுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
09-11-2024 சனி இரவு 08.23 முதல் 11-11-2024 திங்கள் இரவு 11.26 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவருக்கு எட்டு விளக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ மாலை சாற்றி, சூலத்திற்கு எலுமிச்சை பழம் குத்தி வேண்டிக் கொள்ள சகல காரியமும் தடையின்றி இருக்கும்.
சிம்மம்
உச்சம் பெறவேண்டுமென்று கனவு காணும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து செய்யும் தொழிலில் தடை நீங்கி சுபிட்சம் பெற செய்வதும், குரு பார்வை கேதுவுடன் இணைவதால் எதிர்பாராத தனவரவும், அதிர்ஷ்டமான நற்பலனும் கிடைக்கும். இம்மாதம் சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால்.. வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். எதிலும் உறுதியுடன் செயல்படுவீர்கள்.
ராசிநாதன் சூரியன் மூன்றில் அமர்வதும் சந்திரனுடன் இணைவு பெறுவதும் உங்களின் தாயார் மற்றும் தந்தையார் உடல் நலன் சிறப்பாக இருக்கும். மேலும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். அரசியலில் முன்பைவிட சிறப்பாக செயல்படுவதுடன் திறமையும், கொள்கை பிடிப்பும் கொண்டு செயல்படுவீர்கள்.
இனி வரும் காலங்களில் உங்களின் ஒவ்வொரு அசைவும் உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக அமையும். பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு உயரும். எதையும் திட்டமிட்டு செயல்படும் உங்களின் நிலைபாடுகள் சிறப்பான நற்பலன்களை உண்டாக்கும். கலைத்துறையினருக்கு தொழிலில் நல்ல மேன்மையும், பொருளாதார வளர்ச்சியும் கிட்டும்.
பெண்களுக்கு... செய்யும் தொழிலில் வளர்ச்சியையும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் பெறும் வாய்ப்புகள் அமையும். மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு அடையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். புதிய நண்பர்களின் மூலம் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
11-11-2024 திங்கள் இரவு 11.27 மணி முதல் 13-11-2024 புதண் இரவு 01.47 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெண் நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக அமையும்.
கன்னி
தன் கடமையை சரியாக செய்து வளம் பெற எண்ணும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதுடன் உங்களின் லாபாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமர்வதும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது எதையும் சாதிக்கும் வலிமையை பெறுவதுடன் முன்னேற்பாடுகள் மூலம் சிறப்பாக செயல்படுவீர்கள்.
காலை முதல் மாலை வரை எதையாவது சிந்தித்து கொண்டு உங்களின் இலக்குகளை அடையும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அட்டமாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் அமர்வது எதிர்பாராத நற்செய்திகளையும், தனவரவும் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு துறையில் உங்களின் முயற்சிகளுக்கு eல்ல பலன் கிடைக்கும்.
உங்களை வீழ்த்த நினைத்தவருக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள். அரசியலில் உங்களின் மதிப்பு உயரும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் செயல்படும் விதம் உங்களையே ஆச்சரியபட வைக்கும். கலைத்துறையினர்.. தங்களின் சுயமுயற்சி மூலம் கலைத்துறையில் வெல்வீர்கள்.
புதிய நண்பர்கள் சேர்க்கை உங்களை ஊக்குவிக்கும். கடந்த கால தொழில்களில் ஏற்றம் பெற நல்ல சக்தியாக இருந்து வெற்றி காண்பீர்கள். உடல்நலனின் முன்னேற்றம் உண்டாகும். உறவுகளை பலப்படுத்திக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்ளின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி அமைக்கும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொள்வீர்கள். மிருகங்களுக்கும், பறவைகளுக்கு இறை போடுவதன் மூலம் உங்களின் கர்மவினைகளை நீக்கி வளம் பெறுவீர்கள். எதையும் மனஉறுதியுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
13-11-2024 புதன் இரவு 01.48 முதல் 16-11-2024 சனி அதிகாலை 04.23 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடும், வைரவருக்கு மூன்று தீபம் நல்லெண்ணெய் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் வெற்றியை தரும்.
துலாம்
தனக்கான இலக்குகளை சுயமாக நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய் பார்வை பெறுவததால் துல்லியமான செயல்பாடுகளாக அமையும். செய்யும் தொழிலில் முன்பைவிட சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் ராசியை எந்த சுபகிரகமும் பார்க்கவில்லை என்றாலும் கூட ராசிநாதன் ...பாக்கியாதிபதி... புதன் இணைவு பெறுவதும், ராசிநாதனை குரு பார்ப்பதும் உங்களின் அடுத்த கட்ட லட்சியத்தை அடைய உதவிகள் கிடைக்கும்.
பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும். தொழிலில் முயற்சிக்கு நல்ல வெற்றி கிட்டும். தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாய் அமர்ந்தும் ராசியில் தொழில் ஸ்தானாதிபதியாகிய சந்திரன் அமர்வதும் உங்களின் ஜீவன காரியம் நற்பலன்களை பெற்று தரும். பொன், வெள்ளி சார்ந்த தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
பொது விடயங்களில் மக்களின் செல்வாக்குகளை பெறுவீர்கள். குறித்த நேரத்தில் எதையும் செய்து முடிக்கும் பாக்கியம் கிட்டும். நல்லவர்களின் கூட்டு உங்களுக்கு உதவியாக இருக்கும். கலைத்துறையினருக்கு கலைத்துறை சார்ந்த நண்பரின் உதவி கிட்டும். தன் திறமையை வெளிபடுத்த வாய்ப்பு அமையும்.
மாணவர்களின் கல்வியின் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஊக்கத்துடன் செயல்படும் பாக்கியம் கிடைக்கும். பாதிப்பை பற்றி கவலைப்படாமல் புதிய தொடர்புகளை இணைத்துக் கொண்டு உங்களின் வளர்ச்சி பாதையை தேடி சென்று மேன்மை அடைவீர்கள். செய்யும் தொழிலில் மேலும் பொருளாதார பெருக்கத்தை உருவாக்கி கொள்வீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
16-11-2024 சனி அதிகாலை 04.24 முதல் 18-11-2024 திங்கள் காலை 08.06 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடும், செவ்வாய் கிழமை சுப்ரமணியர் வழிபாடும் செய்து வர சகல காரியமும் ஜெயம் உண்டாகும்.
விருச்சிகம்
தைரியமும் துணிச்சலும் கொண்டு எதையும் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் நிச்சய வெற்றிக்கு நல்ல பலனை பெற்று தரும். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் எதையும் உடனே செய்து முடிக்க வேண்டுமென்ற வைராக்கியம் உண்டாகும். கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
உங்களை நம்பி வருபவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். கலைத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல்.. செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி வெற்றி காண்பீர்கள். குறுக்கு வழியில் எதையும் செய்ய விரும்பமாட்டீர்கள். நேர்மையாக இருக்கவேண்டுமென்று எண்ணுவீர்கள். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பீர்கள்.
தொழிலாளர் நலன் காக்க உங்களை அர்பணித்துக் கொள்வீர்கள். புனிதமான செயல்பாடுகளை செய்து நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் நீசம் பெற்று பனிரெண்டில் மறைவு பெறுவதால் சுயதொழிலில் முன்னேற்றம் சற்று குறைவாகவே இருக்கும். புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது உடன் பிறந்தவரின் உதவி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு துறையில் சிலருக்கு சவாலாக இருந்தாலும், உங்களின் திறமையை வெளிபடுத்துவீர்கள். பெண்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். மாணவர் கல்வியில் தொழில் நுட்பம், மின் சாதனம், இலத்திரனியல் சார்ந்த கல்வியில் சிறப்பாக பெறுபேறுகளை பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
18-11-2024 திங்கள் காலை 08.07 முதல் 20-11-2024 புதன் பகல் 01.47 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடுகளும் விளக்கு ஏற்றி செவ்வரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
தனுசு
வைராக்கித்துடன் செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதும், யோகாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்வதும் செய்யும் தொழில் மேன்மையும், எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால்... வெளிநாடு மூலம் தொழில் அல்லது வெளிமாநிலத்தின் மூலம் தொழிலை விருத்தி கொள்ள செய்யும் அற்புத வாய்புகள் அமையும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல்.. எதையும் தெளிவாக புரிந்து கொண்டு திறமையுடன் செயல்படுவீர்கள்.
லாபஸ்தானத்தில் அட்டமாதிபதி சந்திரன் அமர்ந்திருப்பது எதிர்பாராத சில வளர்ச்சிகள் உண்டாகும். நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். பாதுகாப்பான சில வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கலைத்துறையினர் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதிருக்கும். அதனால் அலைச்சலும் இருக்கும்.
இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்ப்புகளை குறைத்து மறுமலர்ச்சியை உருவாக்கி கொள்வீர்கள். பொது வாழ்விலும், அரசியலிலும் ஈடுபாடுகள் இருக்கும். கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு மேன்மை அடைவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
20-11-2024 புதன் பகல் 01.48 முதல் 22-11-2024 வெள்ளி இரவு 09.52 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ மாலை சாற்றி நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும்.
மகரம்
எதிர்காலத்தை வளம் பெற செய்ய முயற்சிக்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதும் எடுத்த காரியத்தில் வெற்றியும், செயலில் மேன்மையும் பெறுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சந்திரனுடன், சூரியன் இணைவு பெறுவது கிடைக்க முடியாத பல விடயங்கள் கிடைக்க பெறுவதும். தொழில் நல்ல வருமானம் பெறுவதும் முக்கிய நிகழ்ச்சிகளில் உங்களின் செல்வாக்கு உயரும்.
அனைத்து காரியத்திலும் சிறந்து விளங்குவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் நீங்களே செயலில் இறங்குவீர்கள். லாபஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி இணைந்திருப்பது எதையும் ஊகிக்கும் முன்பே வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
குழந்தையை போல் குணம் கொண்டு விளங்கும் நீங்கள் எப்பொழுதும் பிறர் மீது அக்கறையை கொண்டு விளங்குவீர்கள். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். காலம் அறிந்து செயல்படுவது உங்களுக்கு பிடிக்கும். பொது வாழ்வில் உங்களின் செல்வாக்கு உயரும்.
உங்களின் ராசியை சுகஸ்தானாதிபதியான செவ்வாய் பார்ப்பது விளையாட்டு துறையிலும், தொழிலில் போட்டிகளிலும் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மனதில் தோன்றிய காரியங்களை தயங்காமல் செய்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்தும், ஆலோசித்தும் செயல்படும் போது நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
22-11-2024 வெள்ளி இரவு 09.23 முதல் 25-11-2024 திங்கள் காலை 08.14 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு பூ மாலை போட்டு இலுப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
கும்பம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்வதும் தனாதிபதி குரு சுகஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் செயல்பாடுகளில் உறுதியும், எதையும் சாதிக்க வேண்டுமென்ற வலிமையும் உண்டாகும். தொழிலாளர்களின் நன்மைகளை கருதி தொழிலாளா்களின் பிரதிநிதியாக சிலருக்கு செயல்படும் வாய்ப்பு உண்டாகும்.
செல்வாக்குகளில் தடைகள்... உறவுகளில் தடைகள்... உண்டாகி, உங்களின் உழைப்பு அதிகரிக்கும். அட்டம கேதுவால் உங்களின் பலம் மேலும் வலுப்பெற்று மேன்மையை அடைவீர்கள் நீங்கள் செயல்படும் விதமும்.. உங்களின் பேச்சும்... சிறப்பாக அமையும்.
பொது வாழ்விலும், அரசியலிலும் உங்களின் செல்வாக்கை தக்க வைத்து கொள்வீர்கள். துன்பம் வரும் போது கவலைப் படுவதும், இன்பம் வரும் போது மகிழ்ச்சியும் கொள்வது உங்களின் வாழ்கையில் எப்பொழுதும் இல்லை. எனினும் உங்களின் முயற்சிகளும், செயல்களும் வெற்றியைப் பெற்று தரும்.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியும் யோகாதிபதிமான சுக்கிரன் புதனுடன் இனைந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கலைதுறை நண்பர்களுக்கு எதிர்பாராத நல்ல வளர்ச்சியையும், பொருளதார வளமும் பெறுவார்கள் .
பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும் மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும் காலத்திற்கு தகுந்தபடி உங்களின் செயல்பாடுகளையும், தொழில் வளர்ச்சியையும் பெற்றுகொண்டு சிறப்புடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
25-11-2024 திங்கள் காலை 08.15 முதல் 27-11-2024 புதன் இரவு 07.54 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வென்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 4.30 - 6.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து தீப மேற்றி வணங்கியும், செவ்வாய் கிழைமைகளில் சுப்பிரமணியர்க்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் நற் பலன்களை பெற்று தரும்.
மீனம்
சகிப்பு தன்மையும், விட்டு கொடுக்கும் மனமும் கொண்ட மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு மூன்றாமிடத்தில் அமர்வதும் பாக்கியஸ்தானாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்களின் விரையாதிபதி சனி விரையஸ்தானத்தில் அமர்வதால் பண வரவு இருந்தாலும் விரைய செலவுகள் உண்டாகும்.
இனி எடுத்த காரியம் ஜெயமாகும். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு செயல்படுவீர்கள். ராசியில் ராகு அமர்வது உங்களின் மனரீதியான நிலைகளில் தடுமாற்றம் உண்டாகும். எதையும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது சிலருக்கு திருமண வாய்ப்புகளும், சிலருக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு தொடர்புகள் மூலமும்,வெளிநாட்டு நண்பர்களின் மூலமும் வளர்ச்சியைப் பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் அறிந்து செயல்படுவீர்கள். உங்களின் பேச்சுகளும், செயலும் உறுதி தன்மை வாய்ந்ததாக அமையும். அரசியலில் ஆற்றலுடன் ஆலோசனைகளை சொல்லும் அறிவு பூர்வமான ஆலோசகராக செயல்படுவீர்.
பாக்கியஸ்தானத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்து செயல்படுவதன் மூலம் நினைத்த காரியத்தை செயல்படுத்தி, வளம் பெறுவீர்கள். கலைத்துறையினர், இசைகலைஞர்கள் நல்ல வாய்ப்பை பெறுவார்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களின் திறமை மூலம் வெற்றியை காண்பீர்கள்.
எதிலும் எப்பொழுதும் எங்கும் உங்களின் செயல்பாடுகள் பாராட்டும்படி அமையும். பாதியில் நின்ற காரியங்கள்... மீண்டும் படிப்படியாக செயல்பட துவங்கும். ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். தொழிலில் இம்மாத கடைசியில் நல்ல பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
27-11-2024 புதன் இரவு 07.55 முதல் 30-11-2024 சனி காலை 07.11 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து வெண் பூசணியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி செவ்வரளி பூ மாலை சாற்றி உங்களின் வேண்டுதல் சொல்லி வர பலன்கள் சீக்கிரம் நடக்கும்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM