தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் திங்கட்கிழமை (04) கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீது இருந்த நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை எடுக்காவிட்டால் இவர்கள் ஏனைய கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரும் நிலை ஏற்படலாம் அவ்வாறு ஆதரவு கோரும் போது ஊழல்வாதிகள் உள்வாங்கப்படலாம் என்று குறிப்பிட்டவர்
தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது தமிழ் மக்கள் ஒரு பலம் மிக்க அமைப்பாக தமிழ் மக்கள் பாராளுமன்றத்துக்கு பிரதிநிகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM