(நெவில் அன்தனி)
மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியில் பெட் கமின்ஸின் திறமையான துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக்கொடுத்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 37 ஓட்டங்களையும் நசீம் ஷா 40 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது.
அவர்களில் மிச்செல் ஸ்டாக் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
எட்டாவது பந்துவீச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்ட மானுஸ் லபுஷேன் ஒரு ஓவரில் 5 ஓட்டங்களுக்கு ரிஸ்வானின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.
204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சற்று சிரமத்திற்கு மத்தியில் 33.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஸ்டீவ் ஸ்மித் (44), ஜொஷ் இங்லிஷ் (49) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.
ஆனால், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்ததால் அவுஸ்திரேலியா தடுமாற்றம் அடைந்தது. (155 - 7 விக்.)
எனினும், சோன் அபொட் (13), பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர்.
தொடர்ந்து பெட் கமின்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM