சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை இனத்தவருக்கு வாக்களிப்பதால் நமக்கு என்ன பலன்? - அரவிந்த்குமார்

04 Nov, 2024 | 05:58 PM
image

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் சிறுபான்மையினருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை இனத்தவருக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.  அதனால் நமக்கு என்ன பலன் இருக்கிறது. நாம் ஏன் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.  பெருங்கட்சிகளுக்கு வாக்களித்து எமது வாக்குகளை வீணடிப்பதை விடுத்து தனித்துப் போட்டியிடும் எமக்கு வாக்களித்து எம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்து உங்களுடைய வாக்குகளை பிரயோசனப்படுத்துங்கள். நமக்கான தேவைப்பாடுகளை நாமாகவே நிறைவேற்றிக்கொள்வோம் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட தலைமை வேட்பாளருமான அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அப்புத்தளை தம்பேதென்ன தோட்டத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அரவிந்த்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டின் நிலைமை முற்றாக மாறிப்போய் இருக்கிறது. இவ்வாறான நிலைமையில் இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கிறது. 

முன்னைய காலங்களில் பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது. 

இன்றைய நிலைமையை பார்க்கையில் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களால்  வெற்றி பெறவே முடியாது என்ற நிலைமை எழுந்துள்ளது.  அப்படியானால் பெரும்பான்மை கட்சிகளுக்கோ அல்லது பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழர்களுக்கோ வாக்களிப்பது என்பது நமது வாக்குகளை சிதறடிப்பதற்கு சமனாகும்.

தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இம்முறை வெற்றி பெற முடியாது  என்ற காரணத்தினாலேயே இம்முறை நாம் தனித்து சிறிய கட்சியில் போட்டியிடுகிறோம்.

எமது  ஐக்கிய தேசியக் கூட்டமைப்பில் தமிழ் வேட்பாளர்களே காணப்படுகின்றனர். இம்முறை பதுளை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தேசிய கட்சிகளில் ஆகக் கூடியது இரண்டு வேட்பாளர்களே வெற்றி பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. அப்படியானால், அந்த பெரும்பான்மை கட்சிகளில் நாம் இணைந்து போட்டியிடும்போது எமது வாக்குகள் அந்த பெரும்பான்மை கட்சிகளுக்கு போய் சேரும். அதனூடாக எமக்கு எந்த பலன்களும் கிட்டப்போவதில்லை. நாம்  பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதால் “மாத்தயா”மார் பாராளுமன்றத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த “மாத்தயா”மார்களின் ஆதரவாளர்கள் எம்மைப் போன்ற தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். இதனை மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

பதுளை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு ஐந்து வீத வாக்குகளை பெற்றுக்கொண்டாலே போதுமானதாக இருக்கும்.

இப்பிரதேசத்தில் இன்னும் நிறைவேற்றவேண்டிய பணிகள் இருக்கின்றன. ஆகவே அந்தப் பணிகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு எமக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு மக்களிடத்தில் கோரி நிற்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41