மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கடந்த காலங்களில் போராடியே பெற்றோம். பதவிக்கு வரப்போகும் புதிய அரசாங்கத்திடமிருந்து போராடியே சலுகைகளை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்நேரமும் தயாராக உள்ளது என தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
மலையக மக்களுக்கான உரிமைகளை யாருமே தங்கத்தட்டில் வைத்து வழங்கவில்லை. அனைத்தையுமே போராடிப் பெற்றோம். ஆனால், தற்போது புதிய அரசாங்கம் உருவாகியதும் இளைஞர்கள் அவர்களின் பின்னாடி போகின்றன. அவர்களுக்கு உண்மையில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் புரியவில்லை. அதேபோல் முன்னைய வரலாறு தெரியாதவர்கள் என்று தான் எனது அனுபவத்தில் கூறுவேன்.
குறிப்பாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான், புதிய அரசாங்கம் வந்தவுடன் அதிரடியாக குறைக்கப்பட்டது முட்டையின் விலை. ஆனால் இன்று முன்பிருந்த விலையோடு அதிகரித்துள்ளது. அத்துடன் நாம் அனைவரும் சோறு மற்றும் ரொட்டி சாப்பிடுவது அதிகம். இன்று பார்த்தால் நாட்டரிசியின் விலை எல்லை கடந்து போகிறது. அதேபோல் ரொட்டிக்கு பயன்படுத்தும் தேங்காய் ஒன்றின் விலை 170 ரூபாய் தாண்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கோதுமை மாவின் விலையை விட தேங்காய் ஒன்றின் விலை அதிகரிக்கும் போன்றுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ரொட்டிக்கு தேங்காய் போடுவது என்பது சந்தேகமாக உள்ளது.
குறிப்பாக புதிய அரசாங்கம் வந்தவுடன் எமது நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கே இவ்வளவு விலை என்றால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையானது தானாகவே உயரும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சாதாரண மக்களுக்கு தற்போதைய எரிபொருள் விலைக் குறைப்பானது போதுமானதாக இல்லை. கடந்த காலங்களில் அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாக காணப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடு தொடர்ந்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மென்மேலும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் பொது மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எந்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் சாதாரண பொதுமக்களுக்கும் பயன் தரும் வகையிலும் சென்றடைய வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமது பிரதிநிதித்துவம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மக்களின் வாக்குகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM