16 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; அயல் வீட்டவர் கைது

04 Nov, 2024 | 05:29 PM
image

16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அயல் வீட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் அநுராதபுரம் எலயாபத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என  பொலிஸார் தெரிவித்தனர். 

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ள நிலையில்  தேசிய அடையாள அட்டை ஒன்றைத் தயாரிப்பதற்காகப் புகைப்படம் எடுப்பதற்குச் சந்தேக நபரான அயல் வீட்டவருடன் இணைந்து அநுராதபுரம் நகரத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரான அயல் வீட்டவர் இந்த சிறுமியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர் குறித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி சிறுமியை மிரட்டி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான அயல் வீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 12:42:39
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31
news-image

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல்...

2025-02-17 13:39:08
news-image

பாமன்கடையில் மின் கம்பத்தில் மோதி கார்...

2025-02-17 12:05:26
news-image

சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும்...

2025-02-17 12:01:13
news-image

இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவர் கீழே வீழ்ந்து...

2025-02-17 11:33:45