bestweb

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான காய்ச்சல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 2

04 Nov, 2024 | 05:07 PM
image

எம்மில் சிலருக்கு உடலின் வெப்பநிலை இயல்பான நிலையிலிருந்து அதிகரித்து காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு நான்கு நாட்களுக்குப் பிறகு பொதுவாக சீரடையும். 

சிலருக்கு நான்கு நாட்களுக்குப் பிறகும், உடல் வெப்பநிலை சீரடையாமல் தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு மேலாக நீடித்தால் அவை கடுமையான காய்ச்சல் பாதிப்பு என அவதானிக்கலாம். இதனை மருத்துவ மொழியில் அக்யூட் ஃபைபிரல் இல்னஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.

காய்ச்சல் ஏற்பட்டு இயல்பான நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு கட்டுப்படாமல் காய்ச்சல் நீடிப்பது, தோலில் தடிப்புகள், ரத்தக் கசிவுகள் , மஞ்சள் காமாலை அறிகுறி,  மூட்டு வலி, டைபாய்டு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை வைத்தியர்கள் கடுமையான காய்ச்சல் என குறிப்பிட்டு இதனை உறுதிப்படுத்திக் கொள்ள சில பரிசோதனைகளை  பரிந்துரைக்கிறார்கள்.

பருவநிலை மாற்றம், உடல் நோய் எதிர்ப்பு திறனில் சமச்சீரின்மை, வைரஸ் தொற்று பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் இத்தகைய கடுமையான காய்ச்சல் பாதிப்பை துல்லியமாக அவதானிக்க ராப்பிட் டயக்னாஸ்டிக் டெஸ்ட் , எலிசா டெஸ்ட் , பி சி ஆர் டெஸ்ட் , ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். 

இத்தகைய பரிசோதனையின் முடிவிற்கு பிறகு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள். 

இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு சில வாழ்க்கை நடைமுறை மாற்றங்களையும் வைத்தியர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

வைத்தியர் ஸ்ரீ தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீழ் முதுகு தண்டுவட நரம்பு அழுத்தப்...

2025-07-18 16:15:51
news-image

மண்ணீரலில் உண்டாகும் நீர்க் கட்டியை அகற்றுவதற்கான...

2025-07-17 17:28:02
news-image

பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நவீன தொழில்நுட்பம்!?

2025-07-16 01:24:38
news-image

முதுகு வலிக்கான காரணங்கள்..?

2025-07-14 14:39:24
news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05