வன்னி மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் அல்லர் - எமில்காந்தன்

Published By: Digital Desk 2

04 Nov, 2024 | 04:48 PM
image

வன்னி மக்கள் இரண்டாந்தரப்பிரஜைகள் இல்லை என்று சுமந்திரனுக்கு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ள சுயேட்சை குழு இலக்கம் 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன்,  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருக்கு எச்சரிக்கையுடன் சவால் விடுத்துள்ளார்.

வவுனியாவில்  திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் நிலைப்பாடுகளின் பிரகாரம் பிற அரசியல் கட்சிகள் மற்றும் தரப்பினர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதில்லை. 

இதனை ஆரம்பத்திலிருந்து நாம் தெரிவித்து வந்திருக்கின்றோம். கடந்த காலங்களில் அவ்வாறு தான் செயற்பட்டும் வந்திருக்கின்றோம்.

இருப்பினும் எம்மையும், எமது மண்ணையும், எமது மக்களையும் தவறாக சித்தரித்தும், இரட்டாந்தரப்பாக பார்க்கும் நிலைமையையும் இட்டு சில விடயங்களை தெளிவு படுத்துவதற்கு முனைகின்றோம்.

தமது இரண்டாம் தரப்பு உறுப்பினர்களை களமிறக்கி அதன்மூலமாக சூட்சுமமான மீண்டும் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கும் தலைவர்கள் அதற்கு மேலதிகமாக என்னையும், கோடரிச் சின்னத்தையும் தரம்தாழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமைத்துவம் சம்பந்தமாக எனது கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள தமிழரசுகட்சியின் வேட்பாளர் சுமந்திரன் தமது கட்சியின் வேட்பாளர்களுக்கும், எமில்காந்தனுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தான் இறங்கிவந்து பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியிருக்கின்றார்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்காக நானும், நாமாக பணியாற்றியுள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி திருட்டதனமாக தேசியப் பட்டில் ஊடாக வருகை தந்தவர் தான் சுமந்திரன். 

அவருக்கு வன்னி மக்கள் இரத்துமும் சதையுமாக உழைத்தமை தொடர்பில் எதனையும் தெரிந்திருக்கப் போவதில்லை. 

அத்துடன் சுமந்திரன் இறங்கிவந்துபதிலளிக்க முடியாதள அளவுக்கு வன்னி மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகள் இல்லை என்பதையும் கூட்டமைப்பு உருவாக்கத்தினை பத்திரைகளில் படித்தும், யாரும் கூறக் கேள்விப்பட்ட உங்களுக்கு வன்னி மக்களின் அர்ப்பணிப்பு பற்றி அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அவருக்கு கூறிவைப்பதற்கு விரும்புகின்றேன். 

அடுத்து, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் என்னையும், எமது கோடரிச் சின்னத்தையும் செல்லுமிடங்கள் எல்லாம் விமர்சனம் செய்வதாக  தகவல்கள் உள்ளன. 

அவர்களுக்கு ஒருவிடயத்தினைக் கூற விரும்புகின்றேன். உங்களுடைய தேர்தல் அரசியல் பிரவேசத்தினை ஆரம்பத்தில் இருந்து அறிந்தவன் என்கிற அடிப்படையில் பதிலுக்கு நானும் சில விடயங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

அதுமட்டுமன்றி கடந்தஜனாதிபதி தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு பணம் வங்கப்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார். 

அவரது கூற்றுப்படி பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதரங்கள் வெளியிடப்பட்டதா? செல்வம் அடைக்கலநாதன் பணத்தை வாங்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார? அவற்றை வெளியிடுவதற்கு இருவரும் தயராக இருக்கின்றார்களா? என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24