இந்தியாவை நியூஸிலாந்து முழுமையாக வெற்றிகொண்டதை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆஸி. முன்னிலை

04 Nov, 2024 | 03:18 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 3 - 0 என முழுமையான வெற்றியை ஈட்டியதை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக முதல் தடவையாக 1956இல் அங்கு விஜயம் செய்த நியூஸிலாந்து 68 வருடங்களின் பின்னர் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முழுமையாக வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாந்திடம் சொந்த மண்ணில் அடைந்த தோல்வியே மிக மோசமான தோல்வியாக கணிக்கப்படுகிறது.

இந்தத் தோல்வியை அடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா 2.17 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் (58.33 சதவீத புள்ளிகள்) இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன் அதன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

அடுத்த மூன்று இடங்களில் இலங்கை (55.56 சதவீத புள்ளிகள்), நியூஸிலாந்து (54.55 சதவீத புள்ளிகள்), தென் ஆபிரிக்கா (54.17 சதவீத புள்ளிகள்) ஆகியன இடம்பெறுகின்றன.

தற்போதைய புள்ளிகள் நிலவரத்தின் பிரகாரம் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் பெரும்பாலும் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் தகுதிபெறுவதற்கான வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

இந்தியாவை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.

எவ்வாறாயினும் அணிகள் நிலையில் தற்போது முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு எஞ்சியுள்ள போட்டிகளில் கிடைக்கவுள்ள முடிவுகளே எந்த இரண்டு அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டில்...

2024-12-11 09:11:17
news-image

பிரிமா சன்ரைஸ் வலுவூட்டும் ஸ்ரீலங்கா கனிஷ்ட...

2024-12-10 22:12:00
news-image

6 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா...

2024-12-10 17:26:14
news-image

தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109...

2024-12-09 15:38:10
news-image

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி...

2024-12-09 14:08:43
news-image

37 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய...

2024-12-09 14:01:06
news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46