James Waterhouse
bbc
தமிழில் ரஜீபன்
-
தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும்.
கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.
ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது.ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு.வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது.
தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார்.'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர் குறிப்பிடுகின்றார்.
போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது.
இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது ,ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது.
எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது.
நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன.உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.
ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம்.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவஉதவி தொடர்வது கடினம் .
எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார்.
உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கும் என்கின்றார்.
இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால் ,ரஸ்யா உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.
மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.
அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான கவசவாகன பிரிவின் தளபதி.
நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம் ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர்.
அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர் இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.
எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி
உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது.
ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.
இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம்.அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது.
போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்.அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம்.
அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார்.1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் ,அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.
கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார்.அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர்.
இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர்.
ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம்.
ரஸ்யா தனது பாரிய இராணுவநடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM