இன்றைய திகதியில் எம்முடைய இளம் பெண்களும், திருமணமான இளம் பெண்மணிகளும் சந்திக்கும் விவரிக்க முடியாத துயரம் என்னவெனில் மகப்பேறின்மை. புத்திர பாக்கியத்தில் தடை ஏற்பட்டாலும் திருமணம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பிள்ளை பேறு கிடைக்கவில்லை என்றாலும் அந்த தம்பதியினர் அடையும் மன துயரம் என்பது எழுத்துக்களால் விவரிக்க இயலாது.
மேலும் இன்றைய இளம் தம்பதிகள் மகப்பேறின்மை பிரச்சனையை தெய்வ குற்றம் என்ற நிலையிலிருந்து விலகி, அறிவியல் ரீதியாக அணுகுகிறார்கள். ஆனால் அதிலும் பல பெண்களுக்கு பல முறை தோல்வியே கிடைக்கிறது.
இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்கு தடையாக இருப்பவற்றை அகற்றுவதற்கு எளிய வழிபாட்டு பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதனை நம்பிக்கையுடன் பின்பற்றும் போது நீங்கள் புத்திர பாக்கியத்தை இயற்கையான முறையிலும் பெறலாம்.
நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்தும் பெறலாம். பெற்றோர் ஆகலாம் என உறுதியாக கூறுகிறார்கள்.
இனி அந்த பரிகாரம் என்ன? என்பதை பார்ப்போம். இதற்கு தேவையான பொருட்கள் : குண்டு மஞ்சள், பூசை பொருட்கள் ,கொண்டைக்கடலை ,ஆறு அகல் விளக்கு ,நல்லெண்ணெய், திரி .
குண்டு மஞ்சள் ஒன்றை எடுத்து அதனை குரு பகவானாக பாவித்து, உங்களுடைய பூஜை அறையில் வியாழக்கிழமைகளில் குரு ஓரை எனக் கருதப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜை செய்து வணங்க வேண்டும்.
இத்தகைய வழிபாட்டினை தொடர்ச்சியாக 24 வாரங்கள் மேற்கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்வதில் கணவனுக்கும் மனைவிக்கும் என யாரிடத்தில் சிக்கல் இருந்தாலும் அந்த சிக்கல் மறைந்து, புத்திர பாக்கியம் சித்திக்கும்.
அதே தருணத்தில் வேறு சிலருக்கு இது தொடர்பாக அனுபவம் பெற்ற வைத்தியரின் அறிமுகம் கிடைத்து புத்திர பாக்கியத்தை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.
வேறு சிலருக்கு இந்த வழிபாட்டின் காரணமாக தங்களுக்குள்ள குறைபாடுகளை தம்பதிகள் உணர்ந்து அதற்கான தீர்வினை நோக்கி உறுதியாக பயணித்து தாய்மை விடயத்தில் வெற்றியினை எட்டுவர்.
அதே தருணத்தில் வியாழக்கிழமை தோறும் ஒரு தட்டில் கொண்டைக் கடலையை பரவச் செய்து, அதன் மீது ஆறு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக செய்து வரும் போது புத்திர பாக்கியத்தை அருளும் குரு பகவானின் பரிபூரணமான அருள் கிடைத்து கணவன், மனைவி என்ற நிலையிலிருந்து, தாய் ,தந்தை என்ற நிலைக்கு மகிழ்ச்சியுடன் உயர்வடைவீர்.
எம்மில் சிலர் இத்தகைய பரிகாரத்தை செய்த பிறகும் எங்களுக்கு புத்திர பாக்கியம் சித்திக்கவில்லை என கருதினால் வேதம் அறிந்த அனுபவம் மிக்க பண்டிதர்களை வீட்டிற்கு அழைத்து வந்து சந்தான லட்சுமி மகா யாகத்தை மேற்கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்களுடைய புத்திர பாக்கியம் தொடர்பான மனக்குறை அகலும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM