Larry Elliott- guardian
தமிழில் ரஜீபன்
1992 இல் அமெரிக்கா உலகில் அதிகாரத்தின் உச்சியில் காணப்பட்ட நாட்களில் கம்யுனிசம் தோற்கடிக்கப்பட்டது.பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டது.சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்தது ,திறந்தபொருளாதாரம் குறித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கான ஆய்வுகூடமாக பயன்படுத்தப்பட்டது.
சீன பொருளாதாரம் தாரளமயப்படுத்தப்பட்டமை அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் உற்பத்தியை வேலைகளை வெளியில் கொடுப்பதற்கான (அவுட்சோர்ஸ்) செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது.
அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான பூகோளமயமாக்கலின் யுகம்பிறந்தது.
இரண்டு லிபரல் தாராளமயமாக்கவாதிகள் ஜோர்ஜ் எச்டபில்யூபுஷ் பில் கிளின்டன் ஆகிய இருவரும் ஜனாதிபதி பதவிக்கா போட்டியிட்டார்கள்.
இறுதியில் கிளின்டன் ஜனாதிபதி புஷ்சினை தோற்கடித்தார்.
பில்கிளின்டன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து 32 வருடங்களாகின்ற நிலையில் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன.
அமெரிக்கர்கள் செவ்வாய்கிழமை தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையில் தங்களது நாடே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகப்பெரிய இராணுவம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.
ஆனால் முன்னர் போல மேலாதிக்கத்திற்கு சவால்கள் இல்லாமில்லை.
1991 இல் வளைகுடா யுத்தத்தின் இறுதியில் புஷ் பெருமையுடன் தெரிவித்த ஒற்றை துருவ உலகம் வீழ்ச்சியடைந்துகொண்டுள்ளது.
1990களில் பணம் பொருட்கள் . மக்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடமாடகூடிய தேசங்கள் அற்ற உலகம் குறித்து பேசப்பட்டது. மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதுஇசுயாதீனமான மத்திய வங்கிகள் வட்டிவீதங்களை அறிவித்தன.உலக வர்த்தக ஸ்தாபனம் வர்த்தக தடைகளை நீக்கியது
ஆனால் விரைவில் எதிர்பார்த்த விடயங்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தன. நவதாரளவாதம் குறித்த அகமகிழ்ச்சி நீண்டநாட்கள் நீடிக்கவில்லை.
மிகவும் குறைவான கட்டுப்பாடுகளுடன் மூலதனம் சுதந்திரமாக நாடுகள் மத்தியில் சென்றமையும்இஅது உள்ளுர் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தமையும்இஇறுதியில் உலகளாவிய வங்கிநெருக்கடியை தோற்றுவித்தது.
அமெரிக்கா நினைத்ததை விட சீனா மிகப்பெரிய வலுவான பொருளாதாரமாக மாறியது.உலக வர்த்தக ஸ்தாபனத்தினால் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்க முடியவில்லை.
வாக்காளர்கள் மந்தகதியிலான வளர்ச்சி குறித்தும் தொழில்மயமாக்கல் இன்மை பாரிய புலம்பெயர்வு குறித்தும் சீற்றத்தை வெளியிட்டனர்.
கொவிட்பெருந்தொற்று சர்வதேச விநியோக சங்கிலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தியது.
தேசியவாத அரசாங்கங்கள் மீண்டும் வந்தனஅதனுடன் செயற்பாட்டாளர்களின் கைத்தொழில்கொள்கைகளும்பாதுகாப்புவாதமும் வந்தன.
அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப அணிவகுத்துச்செல்லும் உலகம் குறித்த புஷ்ஷின் எதிர்பார்ப்புகள் ஒரு தசாப்தகாலம் கூட நீடிக்கவில்லை.
கடந்த மாதம் ரஸ்யஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நடத்திய பிரிக்ஸ் மாநாடு காலத்தின் அறிகுறி அடையாளம்.
பிரேசில் இந்தியா சீனா தென்ஆபிரிக்காரஸ்யா ஆகிய ஐந்து நாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது நான்கு நாடுகள் இணைந்துகொண்டுள்ளன.மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளன இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன.
பிரிக்சினை விஸ்தரிப்பதற்கான புட்டின் நோக்கம் தெளிவானது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உக்ரைன் யுத்தத்தினை தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதே அந்த செய்தி.
அமெரிக்காவின் டொலருக்கு போட்டியாக பிரிக்சினை உருவாக்கும் புட்டினின் முயற்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. டொலர் உறுதியானதாக இலகுவில் மாற்றப்படக்கூடியதாக காணப்படுகின்றது.அதற்கு உடனடி ஆபத்துக்கள் எதுவுமில்லை.மேலும் இந்திய பிரேசில் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் உறவுகளை துண்டிக்க தயாரில்லை.மாறாக இரண்டு முகாம்களிலும் தங்கள் கால்களை வைத்திருக்க விரும்புகின்றன.
எனினும் கசான் ( பிரிக்ஸ்மாநாடு) மூன்று காரணங்களிற்காக மிகவும் முக்கியமானது.
முதலாவது – தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவில்லை என்பதை அது வெளிப்படுத்தியுள்ளது.ஒருபோதும் அது இடம்பெறப்போவதில்லை.
சீனாவும் இந்தியாவும் ரஸ்யாவின் எண்ணையை வாங்க தயாராக உள்ளன.ரஸ்யாவின் உள்நாட்டு பொருளாதாரம் மீள்எழுச்சி தன்மை மிக்கதாக காணப்படுகின்றது.
மேற்குலக நாடுகளிற்கு இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என்றாலும்ரஸ்யாவால் நீண்டகாலமாக போரிட முடியும்அது யுத்தத்தில் வெல்கின்றது.
கசான் புலப்படுத்தியுள்ள இரண்டாவது விடயம் - வளர்ந்துவரும் உலக பொருளாதாரங்கள் அமெரிக்காவின் மேற்குலகின் அழுத்தங்களிற்கு அடிபணிய தயாரில்லை.இது ரஸ்யாவிற்கு மாத்திரமில்லை சீனாவிற்கும் பொருந்தும்.வரிகள் மற்றும் பிற கட்டணங்களால் மேற்குலகசந்தையிலிருந்து அகற்றப்படலாம் என சீனா அஞ்சுகின்றது.
டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெற்றால் அமெரிக்காவிற்குள் வரும் சீன இறக்குமதிகள் அனைத்திற்கும் 60 வீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியினரும் சீனா தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
கமலா ஹரிஸ் ஜோபைடன் காலத்தின் சீனா குறித்த மிகக்கடுமையற்ற ஆனால் வலுவான அணுகுமுறையை தொடருவார்.
பிரிக்ஸ் மாநாடு ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்றாவது இறுதி காரணம் -உலகின் தென்பகுதி நாடுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கும் அவர்களின் பொறுமையின்மையும்.
இந்த நாடுகள் உலகின் சனத்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையையும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் பங்கையும் கொண்டுள்ளன.
புதிய உலக ஒழுங்கு என்பது அனைவருக்கும் செழிப்பை ஏற்படுத்தவேண்டும்ஆனால் அதனை சாதிக்க தவறிவிட்டது.
யுத்தங்கள்இஅதிகரித்துவரும் கடன்கள் இபெருந்தொற்று காலநிலை மாற்றம் காரணமாகஇஉலக வறுமைக்கு எதிரான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது என உலகவங்கி தெரிவித்துள்ளது.
இந்த பல்நெருக்கடிகளிற்கு பதிலளிக்க முடியாத அல்லது தயாராகயில்லாத நிலையில்
செல்வந்த நாடுகள் உள்ளன.1944 இல்உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் ஆகியன பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்டதை போன்று மேற்குலக நாடுகள் இன்னமும் வலுவானவையாக காணப்படுகின்றன.
ஆனால் தற்போது வேறுபட்ட உலக பொருளாதாரம் காணப்படுகின்றது.
வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் யார் வென்றாலும் கடந்த 500 ஆண்டுகளாக இல்லாத வகையில் மேற்குலகின் ஆதிக்கம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM