தீபாவளி வெளியீட்டில் வென்ற 'அமரன்'

Published By: Digital Desk 2

04 Nov, 2024 | 01:30 PM
image

தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்', ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பிரதர்', கவின் நடிப்பில் உருவான 'பிளடி பெக்கர்' ஆகிய மூன்று நேரடி தமிழ் திரைப்படங்களும், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட 'லக்கி பாஸ்கர்' எனும் திரைப்படமும் வெளியானது.

இந்த நான்கு திரைப்படங்களில்  'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய மதிப்பில் நாற்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

தொடர் விடுமுறை நாட்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள். 

இதனால் இந்தப் படத்தின் வெற்றி விழா திங்கட்கிழமையான இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெறுகிறது. 

இந்தத் தருணத்தில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'அமரன்' திரைப்படத்திற்கு, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்ததால் படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது.

'அமரன்' திரைப்படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர் ' எனும் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி கிடைத்திருக்கிறது என்றும் , இதனைத் தொடர்ந்து கவின், நெல்சன் கூட்டணியில் வெளியான 'பிளடி பெக்கர்' படத்திற்கு வரவேற்பு இருந்தது என்றும், இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான 'பிரதர்' படத்திற்கு ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்தது என்றும் திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57
news-image

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும்...

2024-12-07 17:18:28
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மெசன்ஜர்...

2024-12-07 17:19:04
news-image

'பிக் பொஸ்' பாலாஜி முருகதாஸ் நடிக்கும்...

2024-12-07 17:20:01
news-image

'புஷ்பா 2 - தி ரூல்'-...

2024-12-06 17:28:33
news-image

ஃபேமிலி படம் - திரைப்பட விமர்சனம்

2024-12-06 17:03:21
news-image

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் வரவேற்பு பெற்ற...

2024-12-06 15:52:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'போத்தல்...

2024-12-04 17:22:59
news-image

மெகா ஸ்டார்' சிரஞ்சீவியை இயக்கும் இயக்குநர்...

2024-12-04 17:23:34