தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அதிர்ஷ்டசாலி' என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதிர்ஷ்டசாலி' எனும் திரைப்படத்தில் மாதவன், மடோனா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், என்.கே. நிரூபன், ஆர். சி. உபாசனா, மேத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே .எஸ். ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கற்பனை நாடக வகைமையிலான இந்த திரைப்படத்தை ஏ ஏ மீடியா கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் ஷர்மிளா , ரேகா விக்கி மற்றும் மனோஜ் முல்கி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் முதல் தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் மாதவனின் இருவித தோற்றத்தை வெளிப்படுத்தி, 'அதிர்ஷ்டசாலி' என பெயரிடப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இதனிடையே மாதவன் நடிப்பில் அண்மையில் இந்தியில் வெளியான 'சைத்தான்' திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று பெற்றது என்பதும் , அதிர்ஷ்டசாலி எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியிடப்படும் என்பதாலும் ரசிகர்களின் ஆதரவை மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களின் வரவேற்பினையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM