'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் நன்மைகளை இழந்தவர்கள் மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய விசாரணைகளை நடத்தி அறிக்கையை தயாரித்து ஒப்படைக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன இக்குழுவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM