ரொய்ட்டர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு மோசமான விளைவான - டிரம்பின் வெற்றியை எதிர்கொள்வதற்கு ஈரானும் அதன் சகாக்களும் தயாராகிவருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது
ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கமலா ஹரிஸுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்ற போதிலும், ஈரான் தலைவர்களும் லெபனான், யேமன் ஈராக்கில் உள்ள அவர்களின் சகாக்களும் நவம்பர் 5ஆம் திகதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார்; அதனால் தங்களிற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும் என கருதுகின்றனர்.
ஈரானின் அணுநிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகளில் ஈடுபடுவதற்கும் இஸ்ரேலின் பிரதமரை டிரம்ப் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரான் அதிக கரிசனை கொண்டுள்ளது என மேற்குலக ஈரானிய அராபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் ஈரானின் எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக தடைகளை விதிப்பதன் மூலம் அதிகளவு அழுத்தத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்றலாம் என ஈரான் கருதுகின்றது.
2017 முதல் 2021 ம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த டிரம்ப் - இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால் இஸ்ரேலும் தானும் முன்வைக்கும் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனிக்கு கடும் அழுத்தங்களை கொடுப்பார் என ஈரான் எதிர்பார்க்கி;ன்றது.
அமெரிக்காவில் ஏற்படக்கூடிய தலைமைத்துவ மாற்றங்கள் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ஈரானின் வெளிவிவகார கொள்கை மற்றும் பொருளாதார சாத்தியப்பாடுகளி;ல் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் ஈரான் முன்னர் போன்று செல்வாக்கு செலுத்த முடியாது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் ஈரான் இராணுவத்தின் ஆதரவில் செயற்படும் ஆயுதகுழுக்களை அழிப்பதற்கு பலமிழக்க செய்வதற்கு இஸ்ரேல் கடந்த ஒருவருடமாக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
எனினும் இஸ்ரேலிற்கு நிபந்தனை எதுவுமற்ற வெளிப்படையான ஆதரவை டிரம்ப் வழங்குவதால் டிரம்பின் நிலைப்பாடே ஈரானிற்கு மிகவும் ஆபத்தானது தீங்குவிளைவிக்ககூடியது என்ற கருத்து காணப்படுகின்றது.
டிரம்ப் ஈரான் மீது நிபந்தனைகளை விதிப்பார் அல்லது இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மீது இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதிப்பார் என வளைகுடா குறித்த புத்திஜீவிகள் அமைப்பின் இயக்குநர் அப்தெல்லாஜிஸ் அல் சகார் தெரிவித்துள்ளார்.
ஈரானிற்கு எதிரான இராணுவநடவடிக்கையை டிரம்ப் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார் அங்கீகாரம் வழங்குகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்பது பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என தெரிவித்த ஈரானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் தடைகளை கடந்து எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்,வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும் நாங்கள் ஏனைய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் வெற்றி என்பது கொடுங்கனவு என தெரிவித்துள்ள மற்றுமொரு ஈரான் அதிகாரி இஸ்ரேலை திருப்தி;ப்படுத்துவதற்காக அவர் ஈரானிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பார்,எண்ணெய் தடைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வார்,இது எங்களின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் முடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM