பெண்களுக்கான உலகக்கிண்ண போட்டி 11ஆவது தடவையாக இடம்பெறவுள்ளநிலையில், ஐசிசி வழங்கிவந்த சன்மானத்தொகையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. 

பெண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 11ஆவது முறையாக எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி பிரிட்டனில் தொடங்கவுள்ளநிலையில், இவ்வளவு காலமும் வழங்கப்பட்டு வந்த 3.04 கோடி ரூபா பரிசு தொகையை 10 மடங்கு அதிகரித்து, இம்முறை 30.40 கோடியாக சர்வதேச கிரிக்கட் பேரவையான ஐசிசி அறிவித்துள்ளது.

இம்முறை குறித்த உலகக்கிண்ணப்போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்குபற்றவுள்ளன.  

மேலும் குறித்த பரிசுத்தொகை அதிகரிப்பானது பெண்கள் கிரிக்கெட்டிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அத்தோடு முதல்முறையாக பெண்களுக்கான உலக கிண்ண போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஐ.சி.சியின் தலைமை நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.