காலியில் இன்று (6) காலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த நபரே கொல்லப்பட்டவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் திக்கும்புர பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் என்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.