இன்றைய வானிலை

04 Nov, 2024 | 06:21 AM
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது. இதேவேளை இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியதால் பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கொழும்பு தொடக்கம் காலி  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கியும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09
news-image

விவசாயம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளைப் பாதுகாக்க...

2024-12-10 15:37:41