கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அந்தப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (02) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக லொஹான் ரத்வத்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரத்வத்தேவுக்கு சனிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்த பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்தே, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM