கந்த சஷ்டி விரதமான நேற்று சனிக்கிழமை (02) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெறுகிறது.
சாயரட்சை பூஜை மாலை 3.45 மணிக்கும், 2ஆம் காலசந்தி பூஜை 4 மணிக்கும் தொடர்ந்து 4.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெற்று முருகப்பெருமான் வெளி வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.
இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சூரசம்ஹார உற்சவமும் மறுநாள் வெள்ளிக்கிழமை (8) மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.
அதேவேளை சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும்போது பஜனை இடம்பெறுவதை காணலாம்.
இந்த பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தபெருமானின் திருவருளைப் பெறுமாறு மாணவர்களுக்கும் முருகப்பெருமான் அடியவர்களுக்கும் சிவகுரு ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM