- எம்.ஆர்.எம்.வசீம்
தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் சட்டம் இருப்பது இலங்கையிலாகும். என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது வேலை நேரம் 8 மணி நேரமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்களை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
எமது நாட்டில் தொழிற் சங்கங்கள் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைக்காக முன்னெடுத்து வந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே நாங்கள் எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியுமாகின. அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும். அதனால் லக்ஷ்மன் நிபுணாரச்சியின் கூற்றை நாங்கள் கண்டிப்பதுடன் அவரின் இந்த கூற்றுக்கு எதிராக இந்த நாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அணி திறளவேண்டும். நிபுணாரச்சி போன்றவர்களுக்கு இவ்வாறு கதைக்கவிட்டு, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் எங்கே என கேட்கிறோம்.
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்களில் அதிகமானவை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டதாகும். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்ததுடன் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து, ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடையில் வளமான நாடு அழகான வாழ்க்கை என தெரிவித்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.மக்கள் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அட்டை பக்கத்தை மாத்திரம் பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதுதான் இவர்களின் உண்மை சுயரூபம் அவர்களின் வாய்களினாலே வெளிவருகிறது.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளுக்கு எமது புதிய ஜனநாயக முன்னணியே பாரிய சவாலை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு பாரிய பிரச்சினையாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை பாதுகாத்துக்கொள்வதும் தற்போது அவர்களுக்கு சவாலாகியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் பாரிய சக்தியை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM