மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது

03 Nov, 2024 | 05:11 PM
image

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது போதையில் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

காயமடைந்த சகோதரி பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில் வெல்லவாய, ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் மது போதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் எல்லை மீறியதால் கோபமடைந்த சந்தேக நபர், வீட்டிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தனது சகோதரியை பலமாக தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த தாய், சந்தேக நபரான தனது மகனைத் தடுக்க முயன்ற போது சந்தேக நபர் தனது தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

பின்னர், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59
news-image

நஷ்ட ஈடு கேட்டு மூதூரில் விவசாயிகள்...

2024-12-09 17:27:28