(நெவில் அன்தனி)
ஹொங் கொங்கில் நடைபெற்ற ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாக இலங்கை சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
ஹொங் கொங், மொங் கொக் மிஷன் றோட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு இலங்கை சம்பியன் மகுடத்தை சூடியது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 5.2 ஓவர்களில் 6 விக்கெட்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது.
முஹம்மத் அக்லக் 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் பாஹீம் அஷ்ரப் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு மதுஷன்க 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நிமேஷ் விமுக்தி 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.
சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களையும் அணித் தலைவர் லஹிரு மதுஷன்க 19 ஓட்டங்களையும் தரிந்து ரத்நாயக்க ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் பாஹீம் அஷ்ரப் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: தனஞ்சய லக்ஷான், தொடர்நாயகன்: தரிந்து ரத்நாயக்க.
அரை இறுதிப் போட்டி
இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக இன்று முற்பகல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
பாகிஸ்தான் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.
தரிந்து ரத்நாயக்க 2 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு சமரக்கோன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5.5 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சந்துன் வீரக்கொடி 50 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
தனஞ்சய லக்ஷான் 24 ஓட்டங்களையும் நிமேஷ் விமுக்தி ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்டநாயகன்: தரிந்து ரத்நாயக்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM