நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு மரணதண்டனை? : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

Published By: Rajeeban

03 Nov, 2024 | 01:47 PM
image

நைஜீரியாவில் வாழ்கைசெலவு அதிகரிப்பி;ற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நால்வர் மயங்கி விழுந்துள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தி;ல் ஈடுபட்ட 76 பேருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை நைஜீரியா அரசாங்கம் சுமத்தியுள்ளது.

இவர்களில் 14 முதல் 17 வயதானவர்களும் காணப்படுகின்றனர்.

நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்த விரக்தி காரணமாக பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

நைஜீரியாவில் 1976 இல் மரண தண்டனை நடைமுறைக்கு வந்தது எனினும் 1996ம் ஆண்டின் பின்னர் எவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

நைஜீரியாவின் சிறுவர் உரிமை சட்டம் சிறுவர்களை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் அனுமதிக்கவில்லை என சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே சிறுவர்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டு சென்றமை தவறான விடயம், என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று...

2024-12-12 11:15:05
news-image

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5...

2024-12-12 10:24:16
news-image

மேற்குகரையில் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்...

2024-12-12 08:00:31
news-image

சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில்...

2024-12-12 07:41:45
news-image

ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் -...

2024-12-12 07:33:34
news-image

ஆப்கானில் தற்கொலைகுண்டு தாக்குதல்- அகதிகள் விவகார...

2024-12-11 19:59:07
news-image

தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல்

2024-12-11 14:52:28
news-image

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில்...

2024-12-11 11:43:31
news-image

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு:...

2024-12-11 10:24:13
news-image

உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும்...

2024-12-11 07:41:22
news-image

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை...

2024-12-11 07:37:08
news-image

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்கலாம்...

2024-12-11 07:32:36