இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய நியூஸிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் முழுமையான (3 - 0) வெற்றி

Published By: Rajeeban

03 Nov, 2024 | 05:15 PM
image

(நெவில் அன்தனி)

ந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்து 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையான வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

இந்திய மண்ணில் 1956இலிருந்து  இந்த வருடம்வரை விளையாடிய 13 டெஸ்ட் தொடர்களில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 25 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2ஆவது இன்னிங்ஸில் 147 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால், மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட அஜாஸ் பட்டேல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரும் தங்களிடையே 9 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை 121 ஓட்டங்களுக்கு சுருட்டி நியூஸிலாந்தின் அபார வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அதன் கடைசி விக்கெட்டை இழந்தது.

இந் நிலையில் இந்தியாவுக்கு மிகவும் இலகுவான 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை இலகுவாக அடைந்துவிடலாம் என இந்திய கிரிக்கெட் வீரர்களும் இரசிகர்களும் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால், மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்தியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், ரிஷாப் பான்ட் முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

அவர் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் பிடி ஒன்றுக்கான கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், அது ஆட்டம் இழப்பில்லை என கள மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.

எனினும் கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு நியூஸிலாந்து அணியினர் கோரினர்.

அதனை மீளாய்வு செய்த மூன்றாவது மத்தியஸ்தர், பந்து துடுப்பில் பட்ட பின்னரே பாதகாப்பில் பட்டதாகத் தீர்மானித்து கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மாற்றி ரிஷாப் பான்ட் ஆட்டம் இழந்ததாகத் தீர்ப்பளித்தார்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷாப் பான்டைவிட ரோஹித் ஷர்மா, வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டெறில் மிச்செல் 82, வில் யங் 71, டொம் லெதம் 28, ரவிந்த்ர ஜடேஜா 65 - 5 விக்., வொஷிங்டன் சுந்தர் 81 - 4 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (ஷுப்மான் கில் 90, ரிஷாப் பான்ட் 60, வொஷிங்டன் சுந்தர் 38 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 30, அஜாஸ் 103 - 5 விக்.)

நியூஸிலாந்து 2 ஆவது இன்: 174 (வில் யங் 51, க்ளென் பிலிப்ஸ் 26, டெவன் கொன்வே 22, டெறில் மிச்செல் 21, ரவிந்த்ரா ஜடேஜா 55 - 5 விக்., ரவிச்சந்திரன் 63 - 3 விக்.)

இந்தியா - வெற்றி இலக்கு 147 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 141 (ரிஷாப் பான்ட் 64, வொஷிங்டன் சுந்தர் 12, ரோஹித் ஷர்மா 11, உதிரிகள் 12, அஜாஸ் பட்டேல் 57 - 5 விக்., க்ளென் பிலிப்ஸ் 42 - 3 விக்.)

ஆட்டநாயகன்: அஜாஸ் பட்டேல்

தொடர் நாயகன்: வில் யங்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23