உலகில் முதல் நிலை வகிக்கும் ஆடம்பர கார் வர்த்தகநாமமான Mercedes-Benz BMICH மண்டபத்தில் மு.ப. 7 முதல் பி.ப. 1 மணி வரை ஏற்பாடு செய்த Mercedes-Benz வாகன கண்காட்சி அணிவகுப்பு நிகழ்வுடன் இலங்கையுடனான தனது கூட்டுறவைக் கொண்டாடியுள்ளது.
இலங்கையில் Mercedes-Benz ஏற்பாடு செய்த இந்த கண்காட்சி அணிவகுப்பு நிகழ்வில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் மூன்று புள்ளி நட்சத்திர சின்னத்தைக் கொண்ட 753 வாகனங்கள் நிகழ்வில் பங்குபற்றியுள்ளன.
உலகில் இல்லாவிடினும், இப்பிராந்தியத்தில் இது நிச்சயமாக ஒரு சாதனையாகவே அமையும். இலங்கை Mercedes-Benz கழகத்தின் ஏற்பாட்டிலும், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களின் ஒரேயொரு அனுமதிபெற்ற விநியோகத்தரான DIMO நிறுவனத்தின் அனுசரனையுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி அணிவகுப்பு நிகழ்வானது வெறுமனே சாதாரண ஒரு அணிவகுப்பு நிகழ்வல்ல. நிகழ்வில் இடம்பெற்ற பல்வேறு விநோத செயற்பாடுகளில் பங்குபற்றியோருக்கு அது ஒரு மெய்யான அனுபவமாகவே அமையப்பெற்றது.
முப 7 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்வில் நாடெங்கிலுமிருந்து Mercedes-Benz உரிமையாளர்கள் BMICH இற்கு வருகை தந்திருந்தனர். வாயிலில் வரவேற்கப்பட்ட அவர்களுக்கு ஞாபகார்த்த சின்னமாக கோப்பை ஒன்று வழங்கப்பட்டதுடன் வீட்டிற்கு வெளியில் தமது நாளை மகிழ்ச்சியுடன் களிப்பதற்காக அவர்களது பிள்ளைகளுக்கு Mercedes-Benz தொப்பிகள் வழங்கப்பட்டன.
கண்காட்சி அணிவகுப்பின் கருப்பொருளான கார்கள் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சி அணிவகுப்பை நேரடியாக வருகைதந்து கண்டு மகிழ்ந்தவர்கள் போருக்கு முன்னரான யுகத்திலிருந்து நவீன காலத்து அதிநவீன உற்பத்தி வடிவங்கள் வரை Mercedes-Benz வாகனங்களின் திறன் வளர்ச்சி மாற்றத்தை நேரடியாக கண்டறியும் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அணிவகுப்பு கண்காட்சியானது மூன்று பிரதான மண்டபங்களில் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருந்தது: மண்டபம் A ஆனது Mercedes-Benz இற்கும்ரூபவ் மண்டபம் B ஆனது Mercedes-Benz AMG இற்கும், மண்டபம் C ஆனது சிறுவர்களை வேடிக்கை மற்றும் விநோதம் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் மகிழ்விக்கவும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆரோக்கியமான காலையுணவுடன் விருந்தினர்கள் தமது காலைப்பொழுதை ஆரம்பிப்பதற்கு உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், கடந்த நூற்றாண்டு காலமாக உலகில் செலுத்தப்பட்டு வந்துள்ள மூன்று புள்ளி நட்சத்திர சின்னத்தைக் கொண்ட வாகனங்களின் மாதிரிகளை கண்களால் கண்டு வியக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டியது.
AMG வாகன வரிசை மற்றும் ஏவைழ காட்சிப் பிரிவு ஆகியன இந்த ஆண்டு அணிவகுப்பின் இரு பிரதான சிறப்பம்சங்களாக அமையப்பெற்றன. வலு மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் அடையாளமாக, இந்த ஆண்டில் தனது 50 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Mercedes-Benz AMG, F1 தொழில்நுட்ப வலுவூட்டலுடனான மோட்டார் வாகனங்களைக் கொண்டுள்ளது. AMG கண்காட்சிப் பிரிவானது அணிவகுப்பின் கதாநாயகனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், A45 AMG, GLA45 AMG, CLA45 AMG, C63 AMG, GLE43 AMG, SLS AMG, SLC 43 AMG, ML 55 AMG, S 63 AMG மற்றும் AMG GT போன்ற தலையை திருப்பிப் பார்க்கத் தூண்டும் வாகனங்கள் அங்கே இடம்பெற்றிருந்தன. சௌகரியம் மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு வலு கொண்ட Mercedes-Benz Vito என்ற வான் ஆனது Vito கண்காட்சிப் பிரிவில் பிரத்தியேகமாக இடம்பெற்றிருந்தது. குறித்த இந்த வாகனத்தில், Shangri-La ஹோட்டலின் அழகிய வடிவமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலமாக விருந்தினர்களுக்கு, அவர்கள் பங்குபற்றியமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு AMG வர்த்தகநாம சுவரொட்டிகள் அடங்கலாக பல்வேறுபட்ட நினைவுப் பரிசில்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. ஆடம்பரமான கார்கள் தொடர்பான காட்சிப்படுத்தலுடன் மட்டும் நிகழ்வு மட்டுப்படுத்தப்படவில்லை.
விருந்தினர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் ஏராளமான வேடிக்கை மிகுந்த அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. பல்வேறுபட்ட சமூக ஊடக போட்டிகள் மற்றும் லூயிஸ் ஹமில்டன் அவர்களின் உருவச்சிலையுடன் சிறுவர்கள் புகைப்படங்களை எடுக்கும் கூடம் என மேலும் பல்வேறு ஏனைய செயற்பாடுகளும் இந்த் நிகழ்வினை ஒட்டுமொத்தமாக ஒரு குடும்ப நிகழ்வாக மாற்றியமைத்திருந்தன.
பல்வேறு பிரிவுகளின் கீழ் 750 இற்கும் மேற்பட்ட கார்கள் அங்கு இடம்பெற்றிருந்ததுடன், வெற்றியாளர்களைத் தெரிவுசெய்வது நடுவர்களுக்கு பலத்த ஒரு சவாலாக அமைந்தது. வெற்றியாளர்கள் அனைவருக்கும்ரூபவ் விமரிசையான விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இலங்கை Mercedes-Benz கழகமானது, நாடெங்கிலுமுள்ள தீவிர ஆர்வம் கொண்ட விரும்பிகள் மற்றும் உரிமையாளர்களின் ஒரு மெய்யான கூட்டுறவாகும். முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்ற கண்காட்சி அணிவகுப்புக்களைப் போலவே இந்த ஆண்டில் இடம்பெற்ற கண்காட்சி அணிவகுப்பும் இந்த கார்களுக்கு ஈடுஇணை வேறு எதுவும் கிடையாது என்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் மூன்று புள்ளி நட்சத்திர சின்ன வாகனத்தைக் கொண்டுள்ளவர்களின் கூட்டுறவை இந்த கண்காட்சி அணிவகுப்பின் முடிவில் காணக்கிடைத்ததுடன், அனைத்து குடும்பங்களும் தமக்கிடையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, வெறுமனே அறிமுகமானவர்கள் என்ற அடையாளத்திற்கும் அப்பால், புழுதி அடங்கிய பின்னர் சிறந்த பிணைப்புடன் விடை பெற்றனர். முன் பின் அறிமுகமற்ற அனைவரும் ஒன்றாகக் கூடினர், கண்டு மகிழ்ந்தனர், ஒருவரையொருவர் தற்போது அறிந்துள்ளோம் என்ற நிலையில் விடை பெற்றனர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, தேசத்திற்கும், உலகிற்கும் வரைவிலக்கணம் வகுத்துள்ள பிரத்தியேகமான, தனித்துவமான மோட்டார் வாகன கழகமொன்றில் அங்கத்தவர்கள் என்ற பெருமிதத்துடன் அனைவரும் அகன்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM