அடுத்த பத்து வருடங்களில் குடும்பமொன்று கார் ஒன்றுக்கான உரித்தினை கொண்டிருக்கும் வகையில் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாராளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி 14ஆம் திகதி நடைபெறும். 16அல்லது 17ஆம் ஆகும்போது அமைச்சரவை பதவிப்பிரமாணங்களைச் செய்துகொள்ளும். 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கூட்டப்படும்.
அதன்பின்னர் சிறந்தவொரு நாட்டை உருவாக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மக்களுக்கான சிறந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காக கட்டடங்களை நிர்மாணிப்பது அபிவிருத்தி என்றாகிவிடாது. வீதிகளில் குடும்பமாகச் செல்கின்றவர்களைப் பார்கின்றபோது எமக்கு மிகுந்த கவலையாக உள்ளது. கணவன்ரூபவ் மனைவி இரண்டு குழந்தைகள் அனைவரும் மோட்டார் வண்டியில் மழையில் நனைந்தவாறு செல்கிறார்கள்.
வெயிலுக்குள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு முடியாது இருக்கின்றது.
அவர்களின் வாழ்நாள் பூராகவும் பணத்தைச் சேர்த்தால் கூட அவர்களால் கார் ஒன்றைகொள்வனவு செய்ய முடியாத நிலைமையே உள்ளது. ஆகக்கூடுதலாக அவர்களால் டக்டர் ஒன்றுக்கான சில்லையே கொள்வனவும் செய்யும் இயலுமை ஏற்படுகின்றது.
இதற்கு காரணம், கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தி ஊழல், மோசடிகள் நிறைந்த ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தமது மோசடிகளை மறைப்பதற்காக இறக்குமதி வரிவீதத்தினை அதிகரித்துள்ளார்கள்.
கார்களின் விலைகள் பெரிதாக இல்லை. ஜப்பானில் உள்ள விக்ஸ் ரக காரை 12இலட்சத்துக்கு கொள்வனவு செய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த முடியும். ஆனால் மோசமான ஆட்சியாளர்களால் அதனைச் செய்யமுடியாதுள்ளது. அவர்கள் இறக்குமதிக்கான வரியை 75 சதவீதத்துக்கு அதிகமாக விதிக்கும் நிலைமையே உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் வாணகம் 395இலட்சமாக இருப்பதோடு அவருடைய வாகனத்தில் டயர் ஒன்றின் பெறுமதியே ஐந்து இலட்சங்களாக உள்ளது. ஆகவே சதாரண மக்களும் வாகன உரிமையாளர்களாக மாற்றும் நிலைமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் உருவாக்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM