எம்.நியூட்டன்
தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த விஞ்ஞாபனத்தில் ‘கடந்த காலத்தினை கையாளுதல்’ எனும் ஐந்தாவது பகுதியின் முதலாவது பிரிவான ‘நீதி மற்றும் பொறுப்புக்கூறல்’ தலைப்பின் கீழ் “இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி என்பது விட்டுக் கொடுப்பற்றதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத ஒரு அங்கமாக அமைகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ‘இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது, தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகரூபவ் குறித்த சொற்றொடர் இனமுரண்பாட்டின் வரலாறு முழுவதும் என்றோ அல்லது இனஅழிப்பின் வரலாறு முழுவதும் என்றோ மாற்றப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM