உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம் - தபால் திணைக்களம்

Published By: Digital Desk 2

02 Nov, 2024 | 06:29 PM
image

- இராஜதுரை ஹஷான்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை விநியோகிக்கப்படும்.

 வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும்  வியாழக்கிழமையுடன் நிறைவடையும். குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தபால் நிலையத்தை நாடவும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் இதர ஆவணங்களை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தபால்மூல வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்துள்ளோம்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 60 ஆயிரம் பொதிகள் ஊடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் வியாழக்கிழமை (7) உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவுறுத்தப்படும். ஆகவே இக்காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள தபால் நிலையத்தை நாடி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01