தென்னிந்திய சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பாட்டல் ( போத்தல்) ராதா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பாட்டல் ( போத்தல்) ராதா' எனும் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், அந்தோணி, பாரி இளவழகன், ஆறுமுக வேல், அபி ராமையா, ஜே.பி. குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பா. ரஞ்சித் மற்றும் டி.என் .அருண் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்காக காத்திருந்தது. ஏற்கனவே இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டு, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேகப் புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பா. ரஞ்சித்தின் தயாரிப்பு என்றாலே சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் ஏதேனும் ஒரு பிரச்சனையை மையப்படுத்திய படைப்பாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்தின் டைட்டிலும் மது அருந்துபவர்களின் வாழ்வியல் தொடர்பான திரைப்படமாக இருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM