வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி முறைக்காக தேர்தல்களில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை தேசிய சமாதானப் பேரவை நாடெங்கும் முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயிற்சிப்பட்டறையானது மாவட்ட மட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சிப்பட்டறைகளில் பிரச்சார செலவுச் சட்டம், தேர்தல் நடைமுறைகள், தேர்தல் சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வாக்காளர் கல்வி மற்றும் இளைஞர்களுக்கான ஒதுக்கீடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், தத்தம் பிரதேசங்களில் வாக்காளர் கல்வி தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டி வருவது விசேட அம்சமாகும்.
தமிழ் மொழி மூலமான செயலமர்வுகளில் ஊடகவியலாளரும், பயிற்றுவிப்பாளருமான கலாவர்ஷ்னி கனகரட்ணம் வளவாளராக கலந்துகொண்டுள்ளார்.
தேர்தல் குறித்த விடயங்களில் வெளிப்படைத்தன்மை என்பது ஆரோக்கியமான ஆட்சிமுறைக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, இளையோர் பங்களிப்பினை அதிகரிப்பது காலத்தில் கட்டாயம் என்பதோடு, அவர்களை இவ்விடயங்களில் பயிற்றுவிப்பது அவசியமானது என திட்டத்தின் முகாமையாளரான பேரின்பநாயகம் பெனிக்னஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயப்பரப்புகள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் சிவில் சமூக தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்விச் சமூகத்தினர் போன்றோர் கலந்துகொள்ளும் செயலமர்வுகளையும் தேசிய சமாதானப் பேரவை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM