காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை 5.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு தற்போது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வைத்தியர்களுக்கும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (02) நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வைத்தியருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் எதிர்வரும் திங்கட்கிழமை (4) பணிப்புறக்கணிப்பு மீண்டும் முன்னெடுக்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பொதுமக்கள் அசௌகரியத்துக்கு உட்பட்டமையும் கவனிக்கத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM