நடிகர்கள் அதர்வா முரளி - சரத்குமார்- ரகுமான் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிறங்கள் மூன்று ' எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், அம்மு அபிராமி, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருணா மூர்த்தி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.
மேலும் இப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு வெளியாகி இதுவரை எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்த தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேகப் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் நரேன் , அதர்வா முரளி , சரத்குமார் , ரகுமான் , ஆகியோரின் கூட்டணியில் உருவான 'நிறங்கள் மூன்று' திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே ஓரளவு வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM