தனுஷ் - நாகார்ஜுனா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' குபேரா ' படத்தின் கிளர்வோட்டம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா ' எனும் திரைப்படத்தில் தனுஷ் ,நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் அமீக்கோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுனில் நரங்க் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்படும் என படக் குழுவினர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.
தனுஷ் , நாகார்ஜுனா, ராஷ்மிகா , என தென்னிந்திய நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'குபேரா' படத்திற்கு பான் இந்திய அளவிலான ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM